1. மற்றவை

உலகை அச்சுறுத்தப் போகும் அதிவெப்ப உயர்வு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

R. Balakrishnan
R. Balakrishnan
Global Warming

பருவகால மாற்ற விளைவால் 2,100-ம் ஆண்டில் வெப்பம் 3 மடங்கு அதிகரித்து உலக நாடுகளை தாக்க கூடிய ஆபத்து உள்ளது என ஆய்வு ஒன்று எச்சரிக்கை தெரிவிக்கின்றது. சமீபத்தில் ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளில் வெப்ப நிலை அதிகரித்து பொதுமக்களை அவதிப்பட செய்தது. இதன் ஒரு பகுதியாக வெப்ப அலையும் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளில் மட்டுமே மொத்தம் ஆயிரக்கணக்கானோர் வெப்ப அலைக்கு இரையாகினர்.

அதிக வெப்பம் (High heat)

ஒரு புதிய ஆய்வு தகவலின்படி, பருவகால மாற்ற விளைவால் வருங்காலத்தில் வெப்பம் 3 மடங்கு அதிகரித்து உலக நாடுகளை தாக்க கூடிய ஆபத்து உள்ளது என தெரிய வந்துள்ளது. இதன்படி, 2,100-ம் ஆண்டில் அமெரிக்காவின் தென்கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் கோடை காலங்களில் பெருமளவு வெப்ப குறியீடு கடுமையாக இருக்கும். பூமியின் வளம் நிறைந்த அட்ச ரேகை பகுதிகளில், வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் 103 டிகிரி அல்லது அதற்கும் கூடுதலான வெப்ப அளவு பதிவாகிறது. கோடையில் தற்போது இதுபோன்று சில சமயங்களில் ஏற்படும் இந்த நிகழ்வானது, இந்நூற்றாண்டின் மத்தியில், ஆண்டுக்கு 20 முதல் 50 மடங்கு என்ற எண்ணிக்கையில் அதிகரிக்க கூடும் என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.

ஆய்வு (Research)

ஹார்வர்டு பல்கலை கழகத்தின் பருவகால விஞ்ஞானியான லூக்காஸ் ஜெப்படெல்லோ மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் 1,000க்கும் கூடுதலான கணினி தூண்டுதல்களை கொண்டு ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த 1979-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரையில் உலகம் முழுவதும் ஏற்பட்ட வெப்ப நிகழ்வை அடிப்படையாக கொண்டு 2050 மற்றும் 2100 ஆகிய ஆண்டுகளுக்கு ஒப்பிட்டு கணக்கிட்டு பார்த்துள்ளனர். இதில், சிகாகோ நகரில் 1979-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 4 முறை மட்டுமே 103 டிகிரி வெப்ப குறியீடு பதிவாகி இருந்தது. ஆனால், நூற்றாண்டு இறுதியில் ஆண்டுக்கு 11 முறை இந்த தீவிர வெப்ப பதிவு ஏற்பட கூடும் என ஆய்வு தெரிவிக்கின்றது.

எனினும், பொதுமக்களாகிய நாம் வெப்ப விளைவுகளை கட்டுப்படுத்த கூடிய விசயங்களில் கவனம் செலுத்த வேண்டியதும் அவசியம் வாய்ந்த ஒன்றாக உள்ளது என்பது ஆய்வில் இருந்து தெரிய வருகிறது.

மேலும் படிக்க

எதனால் வருகிறது இந்த வாயுப் பிடிப்பு: தீர்வு தான் என்ன?

ஒரே நாடு ஒரே சார்ஜர்: மத்திய அரசின் புதிய திட்டம்!

English Summary: Global warming will threaten the world: Shocking information in the study! Published on: 28 August 2022, 02:35 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.