1. மற்றவை

HDFC: 2 லட்சம் கிராமங்களில் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு!

T. Vigneshwaran
T. Vigneshwaran

HDFC Bank Jobs

தனியார் துறை வங்கியான HDFC தற்போது புதிய இலக்காக 2,500 பேருக்கு வேலைவாய்ப்பினை தயார் செய்யஉள்ளது. அதனோடு சேர்ந்து 2 லட்சம் கிராமங்களுக்கு வங்கி சேவையை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

2,500 பேருக்கு வேலைவாய்ப்பு-Employment for 2,500 people

தனியார் துறை வங்கியான HDFC வங்கி தற்போது ஒரு புதிய இலக்கினை தயார் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அடுத்து வரவிருக்கும் 18-24 மாதங்களில், 2 லட்சம் கிராமங்களுக்கு தனது கிளை நெட்ஒர்க், வணிக நிருபர்கள், வணிக வசதி, டிஜிட்டல் அவுட்ரீச் தளம் ஆகியவற்றை கொண்டு செல்ல தற்போது திட்டம் தீட்டியுள்ளது. இதன் அடிப்படையில் தனது வருவாயை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த திடத்தினை செயல்படுத்திட புதிதாக 2500 நபர்களை வேலைக்கு அமர்த்திட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களை அடுத்த ஆறு மாதங்களில் செயல்படுத்திட இலக்கு நிர்ணயித்துள்ளது.

HDFC வங்கி தனது கடன் வழங்கும் சேவைகளை தற்போது உள்ள கிராமப்புறங்கள் மற்றும் நகர்புறபகுதிகளில் செயல்படுத்தி வருவதை மேலும் விரிவுபடுத்திட முயற்சி செய்து வருவதாக அதன் கிராமப்புற நிர்வாக குழு தலைவர் ராகுல் சுக்லா(rahu shukla) அறிவித்து உள்ளார்.

மேலும் HDFC வங்கி அறுவடைக்கு முந்தைய மற்றும் பிந்தைய பயிர் கடன்கள், இரு சக்கர வாகனம் மற்றும் வாகனக் கடன்கள், தங்க நகைகளுக்கு எதிரான கடன்கள் மற்றும் பிற பராமரிக்கப்பட்ட கடன் தயாரிப்புகள் போன்ற தனிப்பயனாக்கப்பட்ட சலுகைகளை வழங்கவுள்ளதாக முன்னர் அறிவித்த அறிவுப்பு அடிப்படையில்,  தற்போது புதிய சலுகைகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வங்கி முன்னெடுத்து செயல்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

ரேஷன் கார்டு இனி கட்டாயம் இல்லை! மக்கள் மகிழ்ச்சி!

வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! பெட்ரோல் விலை இன்று!

English Summary: HDFC: Employment for 2,500 people in 2 lakh villages!

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.