1. மற்றவை

LIC பங்கு விற்பனை: விரைவில் முடிக்க அரசு தீவிரம்!

R. Balakrishnan
R. Balakrishnan
LIC Stock Sale: Government Intent to Complete Soon!

நாட்pl⁰டின் மிகப்பெரும் பொதுத் துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.,யின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கான தேதியை இறுதி செய்வதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.‌ எல்.ஐ.சி., பொதுப் பங்கு வெளியீடு மூலம் அந்நிறுவனத்திலுள்ள 5 சதவீத பங்குகளை அரசு விற்க உள்ளது.

எல்.ஐ.சி., பங்கு விற்பனை (LIC stock Sales)

எல்.ஐ.சி., பொதுப் பங்கு மூலம் ரூ.65,000 முதல் 70,000 கோடி திரட்ட இருந்தது. மார்ச் மாதத்திற்குள் இதனை முடிக்க திட்டமிட்டிருந்தனர். பிப்ரவரியில் ஏற்பட்ட ரஷ்யா - உக்ரைன் போரினால் உலகப் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன. கடுமையான ஏற்ற இறக்கத்துடன் சந்தை காணப்பட்டதால் அந்த சமயத்தில் நாட்டின் மிகப்பெரிய பங்கு வெளியீட்டை அனுமதிப்பது நஷ்டத்தையே ஏற்படுத்தும் என எண்ணி ஒத்தி வைத்தனர்.

எல்.ஐ.சி., நிறுவனத்தினை ரூ.15 லட்சம் கோடி என மதிப்பீடு செய்யுமாறு செபியிடம் தகவல்கள் தரப்பட்டுள்ளன. மே 12க்குள் அதே தகவல்களுடன் பங்கு வெளியீட்டினை மேற்கொள்ளலாம். அந்த கால அளவை தாண்டினால் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். எனவே பங்கு வெளியீட்டு தேதியை இறுதி செய்வதில் மும்முரமாக உள்ளது.

தற்போதைய சந்தை நிrrலவரப்படி எல்.ஐ.சி.,யின் பங்குகளை 5 சதவீதத்துக்கும் மேல் அரசு இறக்க வாய்ப்பில்லை என்கின்றனர். எல்.ஐ‌.சி. பங்குகளை தனியாருக்கு விற்றால் என்ன பிரச்சினை வரும் என்றே யூகிக்க முடியவில்லை. இப்பொழுதே பங்குகளை தனியாருக்து விற்க கூடாது என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்ன நடக்கப் போகிறது என்று.

மேலும் படிக்க

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு: தாமதப்படுத்தும் ரிசர்வ் வங்கி!

வாட்ஸ்அப்பில் இரயில் டிக்கெட் சேவை: அறிமுகமானது புதிய வசதி!

English Summary: LIC Stock Sale: Government Intent to Complete Soon! Published on: 22 April 2022, 09:59 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.