1. மற்றவை

Mahindra : மஹிந்திரா 2026 ஆம் ஆணடுக்குள் 9 SUVs, 14 CVs, 37 டிராக்டர்களை அறிமுகப்படுத்தவுள்ளது..!

Sarita Shekar
Sarita Shekar
mahindra

மஹிந்திரா நிறுவனம், வரும் ஆண்டுகளில் சுமார் 23 புதிய தயாரிப்புகளை  அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில், 9 எஸ்யூவி (9 SUVs ) மற்றும் 14 வணிக வாகனங்கள்  (14 commercial vehicles ) அடங்கும். மேலும், இவற்றில் 6 எஸ்யூவி  (6 SUVs ) மற்றும் 6 வணிக வாகனங்கள் (6 commercial vehicles)பேட்டரி மூலம் இயங்கும்.  நெக்ஸ்ட் ஜென் ஸ்கார்பியோ(next-gen Scorpio) மற்றும் எக்ஸ்யூவி 700 எஸ்யூவிகள் (XUV700 SUVs )நடப்பு நிதியாண்டில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கூடுதலாக, இந்நிறுவனம் தனது புதிய திட்டமான K2 இன் கீழ் 37 டிராக்டர் மாடல்களை 2026 க்குள் அறிமுகப்படுத்தும். K2 தொடர் ஒரு லையிட் வேயிட் (lightweight ) டிராக்டராகும். இந்த டிராக்டர்கள் ஜப்பானின் மிட்சுபிஷி மஹிந்திரா வேளாண் இயந்திரங்கள் மற்றும் இந்தியாவின் மஹிந்திரா ஆராய்ச்சி பள்ளத்தாக்கு ஆகியவற்றின் உதவியுடன உருவாக்கப்படுகின்றன. அவை மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகை டிராக்டர்களின் முதல் தொகுப்பு 2023 இல் அறிமுகப்படுத்தப்படும்.

டிராக்டர் துறை  FY2021-22 இல் குறைந்த ஒற்றை இலக்கங்களில் வளரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் ஒரு வலுவான தேவையை எதிர்பார்க்கும் வகையில் மஹிந்திரா உற்பத்தியை அதிகரித்து வருகிறது. வாகனத் துறையில் தேவை அதிகரிப்பதற்கு அதிக நேரம் எடுக்கும்.

மஹிந்திரா ஆட்டோ மற்றும் பண்ணை துறைகளில் புதிய மாடல்களில் 12,000 கோடி ரூபாய். மேலும், குழு நிறுவனங்கள் மற்றும் ஆட்டோ மற்றும் பண்ணை துறைகளில் 5,000 கோடி முதலீடு செய்யப்படும்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் நிறுவனம் மொத்தம் ரூ. 17,000 கோடி ரூபாய் இலக்கை நிர்ணயித்துள்ளது. இதில், வாகனத் துறையில் மட்டும் 9,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. ரூ. 6,000 கோடி வழக்கமான வாகனங்களில் முதலீடு செய்யப்படும், மின்சார வாகனங்களுக்கு 3,000 கோடி ஒதுக்கி வைக்கப்படும். பண்ணை உபகரணங்கள் துறையில் 3,000 கோடி முதலீடு செய்யப்படும்.

மேலும் படிக்க..

Maruti Suzuki : பம்பர் சலுகை , மிகக் குறைந்த விலையில் கார்களை வாங்கலாம்!

WagonR EV : மின்சார வாகன சந்தையில் Maruti-யின் அறிமுகம்: விவரங்கள் இங்கே..

CAR : கார்களில் 3 லட்சம் வரை அடிரடி தள்ளுபடி: சலுகை உள்ள கார்களின் பட்டியல் இதோ !

English Summary: Mahindra to launch 9 SUVs, 14 CVs, 37 tractors by 2026 Published on: 31 May 2021, 04:52 IST

Like this article?

Hey! I am Sarita Shekar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.