1. மற்றவை

ஆணுக்குத் தாலி கட்டிய ஆண்- அடக்கொடுமையே!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Male tying the male thali

ஓரினச்சேர்க்கையாளர்கள் எண்ணிக்கை இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. அவர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்வதும் நடக்கத்தான் செய்கிறது.
ஆனால், தெலங்கானாவில் குடிபோதையில் ஆணும் ஆணும் திருமணம் செய்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

சங்காரெட்டி மாவட்டம் ஜோகிபேட் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் அவ்வப்போது அருகில் உள்ள டுமாபால்பேட் பகுதியில் உள்ள ஒரு மதுபான கடைக்கு சென்று குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அங்கு 21வயதான இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஏப் 1ம் தேதி இருவரும் மதுகடையில் அதிகமாக குடித்துள்ளனர். குடி போதையில் இருவரும் ஒரினச் சேர்க்கை திருமணம் குறித்து பேசியுள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் இருவரும் அப்பகுதியில் உள்ள ஜோகிநாத் கோவிலுக்கு சென்றனர். அங்கு 22 வயது ஆட்டோ டிரைவர், 21 வயது இளைஞரின் கழுத்தில் தாலி கட்டி, திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் தனித்தனியே அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் சில நாட்கள் கழித்து ஆட்டோ டிரைவரின்வீட்டிற்கு அந்த இளைஞர், தங்களுக்குள் நடந்தத் திருமணம் குறித்து கூறினார். அதனால், இனி தான் தனது கணவருடன் தான் வாழ்வேன் என்றும் வாதிட்டுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவரின் பெற்றோர் 21 வயது இளைஞருடன் சண்டை போட்டு அவரை வீட்டை விட்டு துரத்திவிட்டனர். இதனால் அந்த இளைஞர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

அதில் இளைஞர் தன்னை தனது பெற்றோர் வீட்டை விட்டு துரத்திவிட்டதால் தனக்கு வாழ வழியில்லை அதனால் இனி தான் தனியாக வாழ ரூ1 லட்சம் பணம் வேண்டும் என கேட்டுள்ளார். பின்னர் இரு குடும்பத்தாரும் தனியாக பேசி ரூ10 ஆயிரம் பணத்தை கொடுத்து ஒருவருக்கொருவர் சம்மந்தம் இல்லை என எழுதி வாங்கிக்கொண்டனர். குடி போதையில் ஆண் ஆணிற்கே தாலி கட்டிய இந்த சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க...

பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?

பழங்களின் தோல்களை வீசாதீர்கள்- இத்தனை ஊட்டச்சுத்துகள் இருக்கு!

English Summary: Male tying the male thali Published on: 14 April 2022, 04:41 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.