1. மற்றவை

நாமக்கல், கொல்லிமலை ITI மாணவர் சேர்க்கை- விண்ணப்பிக்க என்ன தகுதி?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Namakkal, Kollimalai ITI Admission- Eligibility to Apply

தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கும், கொல்லிமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி / தோல்வி அல்லது ஏதாவது ஒரு டிகிரி / டிப்ளமோ பெற்ற மாணவர், மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். வருகிற 20.06.2023 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாமக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையமானது (ITI) அகில இந்திய அளவில் 12-வது இடத்திலும், தமிழ்நாட்டில் 5-வது இடமும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் அரசு ஐ.டி.ஐ-ல் இரண்டு ஆண்டு பயிற்சிகளான எலக்ட்ரீசியன் (Electrician), டிராப்ட்ஸ்மேன் (சிவில்) (Draughtsman Civil), மெஷினிஸ்ட் (Machinist ), (இருபாலர்) ஓராண்டு பயிற்சியாக மெக்கானிக் ஆட்டோபாடி ரிப்பேர், (இருபாலர்) ஓராண்டு பயிற்சியாக கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் & புரோகிராமிங் அசிஸ்டென்ட் (COPA) ஈராண்டு பயிற்சியாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு சாதனங்கள் பராமரிப்பு (ICTSM) பெண்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும் 2023 ஆண்டில் புதிதாக துவங்கப்படவுள்ள தரம் உயர்த்தப்பட்ட TATA TECHNOLOGY (4.0) தொழிற்பிரிவுகளான (இருபாலர்)

1) Manufacturing Process Control and Automation (உற்பத்தி செயல்முறை கட்டுபாடு மற்றும் ஆட்டோமேசன்) - ஓராண்டு ITI 

2) Industrial Robotics And Digital Manufacturing Technician, (தொழிற்துறை ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநர்கள்) – ஓராண்டு ITI 

3) Advanced CNC Machining Technician (மேம்பட்ட CNC இயந்திர தொழில்நுட்ப வல்லுநர்கள்) (இருபாலர்) போன்ற தொழிற்பிரிவுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. - ஈராண்டு ITI 

மேலும் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சியின் போது OJT ( On The Job Training), Internship Training & Industrial Visit வழங்கப்பட்டு வருகிறது.

பயிற்சி முடிந்தபின் campus Interview (வளாக நேர்காணல்) மூலமாக 100% வேலைவாய்ப்பு பெறலாம். மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ / மாணவியர்களுக்கு பயிற்சிக் காலத்தில் பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம், மாதம் ரூ.750/- உதவித்தொகையுடன் இலவச லேப்டாப், சைக்கிள், பாடபுத்தகங்கள், சீருடை, காலணி, வரைபடக்கருவிகள் மற்றும் இலவச பஸ் பாஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன.

மேலும் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த பெண் பயிற்சியாளர்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், ரூ.1000/- மாதந்தோறும் வழங்கப்படும். 8 -ஆம் வகுப்புடன் இரண்டாண்டு ஜ.டி.ஜ (ITI) பயிற்சி மற்றும் 10-ஆம் வகுப்புடன் இரண்டாண்டு ஜ.டி.ஜ பயிற்சி முடித்தவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை மூலம் முறையே 10-ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சிகளில் சேர விருப்பமுள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற ஆன்லைன் மூலமாகவும் அல்லது நாமக்கல் அரசு ஐ.டி.ஐ (ITI) பரமத்தி ரோடு, டோல்கேட் அருகிலுள்ள நிலையத்திற்கு ஒரு பாஸ் போர்டு சைஸ் போட்டோ (Passport Size Photo), டி.சி (TC), பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (10th Mark Sheet), ஜாதி சான்றிதழ் (Community Certificate), ஆதார் அட்டை அனைத்தும் அசலுடன் நேரில் வருகை தந்து 20.06.2023 -க்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

  • 8-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (கொல்லிமலை) & 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (2021 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் 10 ஆம் வகுப்பு முடித்திருப்பின் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்)
  • மாற்றுச்சான்றிதழ் (TC)
  • சாதிசான்றிதழ் (Community Certificate)
  • ஆதார் அட்டை
  • Passport Size Photo - 5 Copy

மேலும் விவரங்களுக்கு 04286-299597, 95006 61559, 89460 95841, 97890 93929 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

மேலும் காண்க:

கரண்ட் பில் எடுக்க யாரும் வரமாட்டாங்க- ஸ்மார்ட் மீட்டர் குறித்து அமைச்சர்!

English Summary: Namakkal, Kollimalai ITI Admission- Eligibility to Apply Published on: 07 June 2023, 03:03 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.