1. மற்றவை

பென்சன் வாங்குவோருக்கு புதிய சேவை: இனி இது போதுமே!

R. Balakrishnan
R. Balakrishnan
Pensioners

ஓய்வூதியதாரர்கள் தங்களது முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இப்போது ஆன்லைனிலேயே டிஜிட்டல் முறையில் உங்கள் ஆவணங்களை மிகவும் பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

டிஜி லாக்கர் (Digi Locker)

இதற்காகத்தான சில ஆண்டுகளுக்கு முன் டிஜிலாக்கர் (DigiLocker) எனப்படும் டிஜிட்டல் லாக்கரை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக டிஜிலாக்கர் வசதியை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார்.
ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், ஜாதி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் என பல்வேறு ஆவணங்களை பொதுமக்கள் டிஜிட்டல் லாக்கரில் பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

இதுமட்டுமல்லாமல், ஓய்வூதியதாரர்கள் தங்களது பென்சன் சான்றிதழையும் டிஜிலாக்கரில் பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலாம். இதற்கான சேவையை பல்வேறு வங்கிகளும் வழங்கி வருகின்றன. இந்த வரிசையில் இப்போது பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியும் (Bank of Maharashtra) டிஜிலாக்கர் வாயிலாக பென்சன் சான்றிதழ் வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

டிஜிலாக்கரில் பென்சன் சான்றிதழ் பெறுவது எப்படி?

  • முதலில் உங்கள் மொபைலில் டிஜிலாக்கர் ஆப் டவுன்லோடு செய்துகொள்ளவும்.
  • இப்போது டிஜிலாக்கர் ஆப் திறக்கவும். உங்களின் ஆதார் கார்டு அல்லது மொபைல் எண் மற்றும் 5 இலக்க பின் நம்பர் கேட்கப்படும்.
  • இதைத்தொடர்ந்து OTP வாயிலாக உங்கள் மொபைல் சரிபார்க்கப்படும்.
  • பின்னர் டிஜிலாக்கர் ஆப்பில் Search Documents பகுதிக்கு செல்லவும். அதில் Pension Documents என பதிவிடவும்.
  • அதில் உள்ள பட்டியலில் 'Bank of Maharashtra’ தேர்வு செய்துகொள்ளவும்.
  • இப்போது ஓய்வூதியதாரரின் பிறந்த நாள் மற்றும் PPO எண் ஆகியவற்றை பதிவிடவும்.
  • பின்னர் உங்கள் தகவல்களை பகிர்ந்துகொள்வதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்கு PPO எண் கீழ் உள்ள இடத்தை கிளிக் செய்யவும்.
  • இது முடிந்தபின் Get Document கிளிக் செய்தால் உங்கள் பென்சன் சான்றிதழ் வந்துவிடும்.

வாட்சப்பில்

இதுமட்டுமல்லாமல் உங்கள் மொபைலில் வாட்சப்பிலும் (Whatsapp) டிஜிலாக்கர் ஆவணங்களை பார்த்து டவுன்லோடு செய்துகொள்ளலாம். இதற்கு 9013151515 என்ற எண்ணுக்கு வாட்சப்பில் Hi என அனுப்பவும். அதில் சொல்லப்படும் வழிமுறையை பின்பற்றி பென்சன் ஆவணம் உள்பட டிஜிலாக்கரில் உள்ள ஆவணங்களை பார்த்து, டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

மேலும் படிக்க

ஆதார் கார்டில் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? தெரிந்து கொள்ளுங்கள்!

பென்சன் வாங்குவோர் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வழிமுறைகள் இதோ!

English Summary: New Service for Pensioners: It's Enough! Published on: 18 October 2022, 07:56 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.