1. மற்றவை

ATM கார்டுக்கு வாடகையா? நமக்கே தெரியாத கட்டண வசூல்!

R. Balakrishnan
R. Balakrishnan

ATM Card

நம் அனைவரிடமுமே வங்கிக் கணக்கு இருக்கும். ஸ்மார்ட்போன் வந்த பிறகு அனைவருமே மொபைல் ஆப், இண்டர்நெட் பேங்கிங் என மிக எளிதாக வங்கிச் சேவையை அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே பயன்படுத்துகின்றனர். ஆனாலும் ரொக்கப் பணத்தை எடுப்பதற்கு ஏடிஎம் மையத்துக்குத்தான் செல்ல வேண்டும். வங்கிக் கிளைகளில் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் நிலைமை மாறி ஏடிஎம் மெஷின்களில் சில நிமிடங்களில் பணத்தை எடுக்கவும் போடவும் முடிகிறது.

ஏடிஎம் கார்டு (ATM Card)

ஏடிஎம் மெஷினில் பணத்தை எடுக்க ஏடிஎம் கார்டு அல்லது டெபிட் கார்டு அவசியம். கிரெடிட் கார்டு மூலமாகக் கூட பணம் எடுக்கலாம். ஆனால் அதில் சேவைக் கட்டணம் அதிகம். ஏடிஎம் கார்டு மூலமாகப் பணம் எடுக்கும்போது ஒரு மாதத்துக்கு இத்தனை முறைதான் இலவசமாகப் பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது. அதைத் தாண்டி எடுத்தால் அதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும். இது அனைவரும் அறிந்ததே. ஆனால் நிறையப் பேர் அறியாத விஷயம் என்னவென்றால் ஏடிஎம் கார்டுக்கு வாடகை செலுத்த வேண்டும் என்பது. அதாவது சேவைக் கட்டணம். இது வருடத்துக்கு ஒருமுறை செலுத்த வேண்டும்.

நிறையப் பேருக்கு இந்த விஷயம் தெரியாது. ஏடிஎம் கார்டு என்பது இலவசமாக வழங்கப்பட்டது என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதற்கு வருடத்துக்கு ஒரு தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் வங்கிக்கு வங்கி மாறுபடும். உதாரணமாக, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டுக்கு வருடாந்திர பராமரிப்புக் கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும். இதனுடன் ஜிஎஸ்டியும் சேர்த்து செலுத்த வேண்டியிருக்கும்.
இந்தத் தொகை வங்கிக் கணக்கிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பிடித்தம் செய்யப்பட்டுவிடும். இது பிடிக்கப்படுவதே நிறையப் பேருக்குத் தெரியாமல் இருக்கலாம். இதுபோல நிறைய கட்டணங்கள் நம் வங்கிக் கணக்கிலிருந்து பிடிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட வங்கியைத் தொடர்பு கொண்டு இதுபோன்ற கட்டணங்கள் தொடர்பான விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஏனெனில், திடீரென்று ஒரு தொகை வங்கிக் கணக்கிலிருந்து பிடிக்கப்பட்டால் அது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியைத் தரலாம்.
ஆன்லைன் பண மோசடிகள் அதிகமாக நடைபெறுவதால் வங்கிக் கணக்கில் உள்ள பேலன்ஸ், சேவைக் கட்டணம் பிடிக்கப்படுவது, பணம் எடுப்பது, பணம் போடுவது போன்ற விவரங்களை சரிபார்ப்பது நல்லது.

மேலும் படிக்க

SBI வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: இனி இது எல்லாமே இலவசம் தான்!

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: சூப்பர் வசதி அறிமுகம்!

English Summary: Renting an ATM card? Fee collection that we do not know!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.