1. மற்றவை

SBI Banking: Whats App-லயே SBI வங்கிச் சேவை தொடக்கம்!

Poonguzhali R
Poonguzhali R
SBI Banking: Banking Services Launched Through Whats App!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI) தற்போது WhatsApp banking வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கிக் கணக்கு குறித்த தகவல்களை இனி வங்கிக்குச் சென்று பெறத் தேவையில்லை. வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பினால் போதும், பெறலாம். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

வாட்ஸ்அப் வங்கிச் சேவையைப் பெறுவதன் மூலம் சேமிப்புக் கணக்கின் இருப்பை அறிந்து கொள்ள முடியும். அதோடு, மினி நிதிநிலை அறிக்கை பெறுவது எனப் பல வசதிகளைப் பெறமுடியும் எனக் கூறப்படுகிறது.

எவ்வாறு பதிவு செய்வது?

  • வாடிக்கையாளர்கள் தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து WAREG என டைப் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு ஒரு இடைவெளி ( space) விட்டு உங்கள் (AC NO XXXX) கணக்கு எண்ணை டைப் செய்ய வேண்டும்.
  • இந்த குறுஞ்செய்தியை 7208933148 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
  • அதன் பிறகு 9022690226 என்ற SBI வங்கியின் எண்ணிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வரும்.

மேலும் படிக்க: PM Kisan | விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு!

  • அதன் பிறகு, Hi SBI எனக் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
  • பின்னர், ‘Dear Customer,Welcome to SBI Whatsapp Banking Services! என்று திரும்ப ஆங்கிலத்தில் குறுஞ்செய்தி வரும்.
  • இப்பொழுது, இருப்பு நிலை, மினி நிதிநிலை அறிக்கை முதலானவைகளை இப்பதிவு விளக்குகிறது.

எப்படி பயன்படுத்துவது?

மேலும் படிக்க: Whatsapp செய்தாலே ஆட்டோ வரும்: சூப்பர் வசதி!

SBI கார்டு வாடிக்கையாளர்களுக்கும் வங்கி வாட்ஸ் அப் சேவையை வழங்குகிறது. கார்டு குறித்து அறிய OPTIN என டைப் செய்து 9004022022 என்ற எண்ணுக்குக் குருஞ்செய்தி அனுப்பிப் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

TNAU | சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் டி5 சூரணம்!

TNPSC: நில அளவர்-வரைவாளருக்குத் தேர்வு: 1089 காலிப்பணியிடங்கள்!

English Summary: SBI Banking: Banking Services Launched Through Whats App! Published on: 31 July 2022, 03:50 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.