1. மற்றவை

PF பணத்தை குறிவைக்கும் மோசடி கும்பல்: எப்படி பாதுகாப்பது?

R. Balakrishnan
R. Balakrishnan
PF Account

உலகளவில் மிகப்பெரிய சமூக பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO). இந்நிறுவனத்தில் இந்திய சம்பளதாரர்கள் PF கணக்கு வைத்திருக்கிறார்கள். எனினும், அண்மைக்காலமாக PF கணக்குதாரர்களை குறிவைத்து சில மோசடி கும்பல்கள் கிளம்பியுள்ளன.

PF பாதுகாப்பு (PF Protection)

மோசடி கும்பல்களிடம் இருந்து PF கணக்குதாரர்கள் தங்கள் பணத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எனவே, PF கணக்குதாரர்கள் எப்படி தங்களது சேமிப்பான வருங்கால வைப்பு நிதியை பாதுகாத்துக்கொள்வது என்பதை பார்க்கலாம். மோசடி கும்பல்களை சேர்ந்தவர்கள் EPFO நிறுவனத்தின் அதிகாரி எனவும், PF அலுவலகத்தில் இருந்து பேசுகிறோம் எனவும் உங்களை தொடர்பு கொள்வார்கள் அல்லது அரசு அதிகாரி எனவும் கூறி உங்களை தொடர்புகொள்வார்கள் இந்த மோசடி கும்பலினர்.

குறிப்பாக உங்களிடம் ஆதார் எண், பான் எண், வங்கி கணக்கு விவரங்கள், OTP பாஸ்வோர்ட் போன்ற விவரங்களை கேட்டால் கண்டிப்பாக உங்களை தொடர்புகொள்ளும் நபர் மோசடி கும்பலை சேர்ந்தவர் என சந்தேகிக்கலாம். ஏனெனில், உங்களிடம் இந்த விவரங்களை PF அலுவலகத்தில் இருந்து தொடர்புகொண்டு கேட்கவே மாட்டார்கள். அண்மையில், PF கணக்குதாரர் ஒருவர் தனது அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அவர் PF பணம் எடுப்பதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டதாக அவருக்கு முதலில் தகவல் வந்ததாம். ஆனால் அவர் சாதுர்யமாக மோசடி கும்பலின் விளையாட்டை புரிந்து கொண்டார். உடனே அவர் இச்செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து சக PF பயனாளிகளுக்கு அலர்ட் கொடுத்தார். மேலும் அமைச்சகங்கள், செய்தி நிறுவனங்களுக்கும் இதை டேக் செய்திருந்தார்.

இதுபோன்ற மோசடி கும்பல்கள் முதலில் PF அதிகாரிகள் போல் வேடமிட்டு செய்தி அனுப்புவார்கள். பின்னர் உங்களது ஆதார் எண், பான் எண், OTP போன்ற விவரங்களை கேட்பார்கள். இந்த விவரங்களை நீங்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத வரை உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும். இதன் மூலம் PF கணக்குதாரர்கள் மட்டுமல்லாமல் EPS பென்சன் பயனாளிகளும் ஏமாறாமல் தங்கள் நிதியை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மேலும் படிக்க

PF கணக்கை மாற்றும் வழிமுறைகள்: தெரிந்து கொள்ளுங்கள்!

PF வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு: TDS 20% ஆக குறைவு!

English Summary: Scams Targeting PF Money: How to Protect? Published on: 16 February 2023, 04:05 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.