1. மற்றவை

பென்சனர்களுக்கு சூப்பர் வசதி: இனிமே ஈசியா இதை செய்யலாம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Pensioners Life Certificate

ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து பென்சன் பெறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் வாழ்நாள் சான்றிதழை (Life certificate) சமர்ப்பிக்க வேண்டும். ஒரு ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்றுதான் வாழ்நாள் சான்றிதழ். எனவே, வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்காதவர்களுக்கு பென்சன் வராது.

வாழ்நாள் சான்றிதழ் (Life Certificate)

மத்திய அரசு, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், EPFO ஓய்வூதியதாரர்கள் என அனைவருமே வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். முன்பெல்லாம் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க பென்சன் அலுவலகத்துக்கு ஓய்வூதியதாரர்கள் அலைய வேண்டியிருந்தது.

எனினும், இப்போது வீட்டில் இருந்தபடியே ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை சமர்பிக்கலாம். இதற்கு டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் (Digital Life certificate) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தபால் அலுவலக சேவையை பயன்படுத்தி வீட்டில் இருந்தே டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

இந்திய தபால் வங்கி (India Post Payments Bank) ஓய்வூதியதாரர்களின் வீட்டுக்கே நேரடியாக சென்று அவர்களிடம் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை பெற்றுக்கொள்கிறது. இந்த சேவை வாயிலாக, ஓய்வூதியதாரர்கள் வீண் அலைச்சல் இல்லாமல் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்.

இதற்கு முதலில் 155299 என்ற இலவச எண்ணை அழைத்து கோரிக்கை வைக்க வேண்டும். உங்கள் முகவரியில் தபால் காரர் வந்து வாழ்நாள் சான்றிதழை பெற்றுக்கொள்வார். இதற்கு 70 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும் படிக்க

பென்சன் பற்றிய கவலையா? முத்தான 3 பென்சன் திட்டங்கள் இருக்கு!

EPFO பயனாளரா நீங்கள்? ரூ. 5 லட்சம் வரை முக்கிய பலன்கள் உங்களுக்கு தான்!

English Summary: Super Convenience for Pensioners: Now easy Can Do It! Published on: 28 September 2022, 07:57 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.