1. மற்றவை

அதிக பென்சன் தரும் சூப்பரான LIC பாலிசி!

R. Balakrishnan
R. Balakrishnan
LIC Pension

எல்ஐசியின் ’ஜீவன் சாந்தி திட்டம்’ ஒரு பிரீமியம் திட்டமாகும். இந்த பாலிசியின் கீழ், பாலிசியை வாங்கியவுடன் உங்களின் பென்சன் தொகை நிர்ணயிக்கப்படும். இந்த பாலிசி எடுக்க குறைந்தபட்சம் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை.
30 வயது முதல் 79 வயது வரை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம். பாலிசிதாரரின் வாழ்நாளில், அவர் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக உத்தரவாதமான வருமானத்தைப் பெறுவார். ஒருவேளை பாலிசிதாரர் இறந்தாலும், அவரது நாமினி உத்தரவாதமான வருமானத்தைப் பெறலாம்.

தேவையான ஆவணங்கள்

முகவரி ஆதாரம்: மின்சார கட்டண பில், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போன்றவை.

அடையாளச் சான்று: ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்றவை.

ஆண்டுத் தொகை செலுத்தும் முறை

நான்கு வகையான வசதிகள் இதில் உள்ளன. ஆண்டு, அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதாந்திரம் முறையில் செலுத்தலாம். ஆண்டுத்தொகை செலுத்தும் முறையைப் பொறுத்து, ஆண்டுத்தொகை வழங்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடம், ஆறு மாதங்கள், மூன்று மாதங்கள் அல்லது ஒரு மாதத்திற்குப் பிறகு வழங்கப்படும்.

நிபந்தனைகள்

  • பாலிசி தொடங்கும் போது குறைந்தபட்ச வயது: 30 ஆண்டுகள்
  • பாலிசி தொடங்கும் போது அதிகபட்ச வயது: 79 ஆண்டுகள்
  • குறைந்தபட்ச வேஸ்டிங் வயது: 31 வயது
  • அதிகபட்ச வேஸ்டிங் வயது: 80 வயது
  • குறைந்தபட்ச ஒத்திவைப்பு காலம் (Deferment Period) : 1 வருடம்
  • அதிகபட்ச ஒத்திவைப்பு காலம்: 12 ஆண்டுகள் (அதிகபட்ச விருப்ப வயதுக்கு உட்பட்டது)

குறைந்தபட்ச வருடாந்திரம்

மாதாந்திரம் - மாதம் ரூ. 1000
காலாண்டு - ரூ. 3000
அரையாண்டு - ரூ.6000
ஆண்டுக்கு - ரூ. 12000

எவ்வளவு பென்சன்?

உதாரணமாக, 37 வயது நிரம்பிய ஒரு நபர் இந்த பாலிசியை எடுத்தால் அவர் ஒரே பிரீமியம் தொகையாக ரூ. 20,36,000 செலுத்தினால் உடனடியாக அவர் பென்சன் வாங்க முடியும். அவருக்கு மாதத்துக்கு ரூ. 10,067 என்ற அளவில் பென்சன் பணம் கிடைக்கும். அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ, ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது ஒரு வருடத்துக்கு ஒரு முறையே பென்சன் வாங்கும் வசதியும் உள்ளது.

மேலும் படிக்க

கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: விரைவில் UPI வசதி!

தமிழக அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது?

English Summary: Super LIC policy with high pension! Published on: 28 March 2023, 07:40 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.