1. மற்றவை

தமிழகத்தில் பரவலான மழை: வெள்ளத்தில் தவிக்கும் வட மாநிலங்கள்

KJ Staff
KJ Staff
Moderate rainfall in Tamil Nadu

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக நேற்றைய அறிக்கையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது, இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பதிவாகியுள்ளது.

வறட்சி மாவட்டமாக கருதப்படும் விருதுநகரில் கனமழை கொட்டித்தீர்த்தது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டி உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற இடங்களில் விடிய விடிய மழை பெய்துள்ளது.

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துள்ளது, இதன் காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானலில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் கடந்த 2 நாட்களாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது மற்றும் இதே போன்று குற்றாலத்திலும் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆரணி டவுன், சேவூர், எறும்பேடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது.

bihar, UP Flood

வெள்ளத்தில் தவிக்கும் வடமாநிலங்கள்

பிஹார், உத்திரபிரதேசம் மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. மேலும்  பெய்து வரும் கனமழைக்கு இது வரை 134 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பீஹாரில் கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக தலைநகர் பாட்னா உட்பட 14 மாவட்டங்கள் பெய்து வரும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது, குடியிருப்புகளில் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் வீடுகளின் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி வேகமாக நடந்து வருகிறது மற்றும் இதே போல் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட், ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு பலியாகியவர்களின் எண்ணிக்கை 13 ஆக உள்ளது.

இதை தொடர்ந்து இந்த மழை பொழிவானது அடுத்த சில தினங்களுக்கு தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

K.Sakthipriya
Krishi Jagran 

English Summary: Tamil Nadu Receives Moderate Rainfall: Bihar, UP heavy flood Death increases into 134

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.