1. மற்றவை

ஒடிசாவில் பிரம்மாண்டமாக தொடங்கிய உட்கல் க்ரிஷி மேளா-2023

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Utkal Mela's second edition kick started today in Odisha

க்ரிஷி ஜாக்ரான் பங்களிப்புடன் ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் பர்லகேமுண்டி பகுதியிலுள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகத்தில் ”உட்கல் க்ரிஷி மேளா -2023” இன்று தொடங்கியது.

கடந்தாண்டு (2022) மார்ச் மாதம் 10 ,11 ஆம் தேதி, க்ரிஷி ஜாக்ரான் பங்களிப்புடன் ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் பர்லகேமுண்டி பகுதியில் அமைந்துள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகத்தில் ” உட்கல் க்ரிஷி மேளாமுதல் முறையாக நடைபெற்றது. அந்த நிகழ்வின் வெற்றியினை தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தாண்டு மீண்டும் அதே செஞ்சுரியன் பல்கலைக்கழகத்தில் ”உட்கல் க்ரிஷி மேளா- 2023” இன்று வெகு விமர்சையாக தொடங்கியது.

கல்லூரியின் பேராசிரியர் அனிதா பத்ரா வரவேற்பு உரை ஆற்றி நிகழ்வை தொடங்கி வைத்தார். பின்னர் கல்லூரியின் நிர்வாக தலைவர் தேவேந்தர் ரெட்டி, க்ரிஷி ஜாக்ரான் ஊடகத்தின் தலைமை நிர்வாகி டொமினிக், விவசாய விஞ்ஞானியுமான நாடபர் சரங்கி, பேராசிரியர் பர்வத் குமார் ரோல் ஆகியோர் நிகழ்வின் நோக்கம் குறித்து எடுத்துரைத்து வாழ்த்தி பேசினர். வருகை தந்த விருந்தினர்கள் கெளரவிக்கப்பட்ட நிலையில் , பேராசிரியர் நந்தா நன்றியுரை வழங்கினார்.

உட்கல் க்ரிஷி மேளாவில் அமைக்கப்பட்டிருந்த ஸ்டால்களை விருந்தினர்கள் பார்வையிட்ட நிலையில், விவசாயத்துறையில் இயந்திரங்களின் பங்கு மற்றும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் முறைகள் குறித்து கலந்தாய்வு நிகழ்வு நடைபெற்றது. பபானி சங்கர் தாஸ் மற்றும் சர்மிஸ்தா சாஹூ ஆகியோர் தலைமையில் இந்த கலந்தாய்வு நிகழ்வு நடைபெற்றது.

இன்று தொடங்கிய ”உட்கல் க்ரிஷி மேளா- 2023” நாளையும் நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற நிகழ்வில் திரளான விவசாயிகள், விவசாய உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், பண்ணை உரிமையாளர்கள், விவசாயப் பொருட்கள் விநியோகஸ்தர்கள், சப்ளையர்கள், சில்லறை விற்பனையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், வேளாண் வல்லுநர்கள், தொழிலதிபர்கள், ஊடக நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் நுகர்வோர் மற்றும் விவசாயிகளுக்கு சமீபத்திய தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் நிறுவனங்கள், அமைப்புகள் தங்களின் தயாரிப்புகள், வழங்கும் சேவைகள் மற்றும் திட்டங்களை விவசாயிகள் மத்தியில் காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.

விவசாயிகள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை முன்வைக்கவும், உயர்மட்ட வேளாண் நிபுணர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறவும் இந்த மேளா வாய்ப்பு ஏற்படுத்தித் தந்துள்ளதாக நிகழ்வில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

வேளாண் இயந்திரங்களின் தேவை, பயன்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து அறியவும், விவசாயத்திற்கு அரசின் சார்பில் வழங்கப்படும் சலுகைகள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிற்சி வகுப்புகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாளையும் நிகழ்வு தொடர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:

நெற்பயிரை தாக்கும் துங்ரோ, பிரவுன் ஸ்பாட் நோய்களுக்கு என்ன தீர்வு?

காலநிலை அபாயத்தை எதிர்கொள்ளும் 100 மாநிலங்களின் பட்டியல்-தமிழகத்திற்கு எந்த இடம்?

English Summary: Utkal Mela's second edition kick started today in Odisha Published on: 21 February 2023, 05:04 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.