1. மற்றவை

ஒயின் மதுபானம் அல்ல-சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்க அனுமதி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
allowed to sale in supermarkets!

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தாய்குலத்தினர் தவறாது கோரிக்கை விடுத்துவருகின்றனர். ஆனால் மாநில அரசோ சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது. இந்த நடவடிக்கை குடிமகன்களை குஷிப்படுத்தியிருப்பது ஒருபுறம் என்றால், மறுபுறமோ மகளிரை ஆத்திரம் அடையச் செய்துள்ளது.

மதுபான வகைகளில் ‘ஒயின் என்று ஒன்று உண்டு. பதப்படுத்தப்பட்ட திராட்சைச் சாறு கொண்டுத் தயாரிக்கப்படும் ஒயின், உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அதில் குறைந்த சதவீதம் அல்கஹால் சேர்க்கப்பட்டுதான் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்நிலையில், ஒயின் மதுபானம் அல்ல என்பதை உறுதி செய்யும் வகையில், அதனை அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்க மகாராஷ்டிர மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சூப்பர் மார்க்கெட்டில் ஒயின்

மகாராஷ்டிர அமைச்சரவைச் கூட்டத்தில், சூப்பர் மார்க்கெட் மற்றும் கடைகளில் ஒயின் விற்பனையை அனுமதிக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பழ விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டும், ஒயின் ஆலைகளுக்கு ஊக்கம் அளிக்கும்விதமாகவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்காக

இது குறித்து ஆளும் கட்சியான சிவசேனாவை சேர்ந்த மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும் போது, ஒயின் என்பது மதுபானம் அல்ல. ஒயின் விற்பனை அதிகரித்தால் விவசாயிகள் அதிக பலன்களை பெறுவார்கள்.விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க நாங்கள் இதை செய்கிறோம். சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்பனையை பா.ஜ.க. எதிர்க்கிறது. ஆனால் அக்கட்சி விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை என்றார்.

ஒயின் விற்பனை தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரக் கடைகள் மற்றும் நிறுவனங்களின் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 1000 சதுர அடி அல்லது அதற்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட்டுகளில் மற்றும் கடைகளில் ஒயின் விற்பனையைப் பின்பற்றலாம்.

வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் மது விற்பனைக்கு அனுமதி கிடையாது. மதுவிலக்கு அமுலில் உள்ள மாவட்டங்களில் மது விற்பனை அனுமதிக்கப்படமாட்டாது என்று தெரிவித்து உள்ளது.மகாராஷ்டிர அரசின் இந்த முடிவுக்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ள பிஜேபி, மது அருந்துவதை மாநில அரசு ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் படிக்க...

புதிய நியோகோவ் வைரஸ்- படுபயங்கர உயிர்க்கொல்லி!

English Summary: Wine is not liquor — allowed to sale in supermarkets! Published on: 28 January 2022, 08:55 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.