1. வெற்றிக் கதைகள்

புன்னைநல்லூரை சேர்ந்த ரமேஷின் புதிய சாதனை: பேப்பர் ரோல் மூலம் நேரடி நெல் விதைப்பு

KJ Staff
KJ Staff
Farmer Ramesh

விவசாயத்தின் முக்கிய பிரச்சனைகளுள் ஒன்றானது ஆட்கள் பற்றாக்குறை. இந்த பிரச்சனையை கொண்டு விவசாயிகள் பலர் சிரமப்பட்டு வருகின்றனர். ஆனால் பல்வேறு பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் வகையில் விவசாய விஞ்ஞானிகள் பலரும் செயல்பட்டு வருகின்றனர். அப்படி விவசாய விஞ்ஞானிகளுள் ஒருவரான ரமேஷ் புதிய நெல் விதைப்பு கருவி ஒன்றை வடிவமைத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் பேப்பர் ரோலைக் கொண்டு நேரடி நெல் விதைப்பு கருவி ஒன்றை வடிவமைத்துள்ளார்.

அவர் கூறுகையில் எனக்கு சொந்தமாக மூன்று ஏக்கர் நிலம் இருக்கிறது. விவசாயத்திலும்,  இயந்திர தொழில்நுட்பத்திலும் நல்ல அனுபவம் உண்டு. அந்த அனுபவத்தின் பலனாக கண்டு பிடித்தது தான் இந்த நெல் விதைப்பு கருவி. இந்த கருவிக்கு "பேப்பர் ரோல் மூலம் ஒழுங்கு முறை நேரடி நெல் விதைப்பு" என்று பெயர் வைத்திருக்கிறேன் என்றார் ரமேஷ். வேலை ஆட்கள் பற்றாக்குறையையும், நாற்றுநடை முறைக்கு ஆகும் செலவையும் இந்த கருவி குறைக்கிறது.

இந்த கருவியை கொண்டு விதைப்பதினால் வழக்கமான மகசூல் நாட்களை விட 10 நாட்கள் முன்னதாகவே அறுவடைக்கு வந்து விடும். இந்த கருவி மூலம் விதைப்பதினால் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ விதை நெல்லே போதுமானது மற்றும் ஒரு ஏக்கர் நிலத்திற்கு 4 மணி நேரம் மட்டுமே செலவாகிறது மேலும் விதைப்புக்கு 2 ஆட்கள் போதும்.

இந்த புதிய பேக்கிங் இயந்திரம் மூலம், பேப்பர் ரோலில் விதை நெல்லை நிரப்பிட வேண்டும். விதைப்பு இயந்திரத்தை முன்னோக்கி தள்ளிக்கொண்டே சென்றால் நிலத்தில் "கொழு" போன்ற கூர்மையான பகுதி நிலத்தை நன்கு பறித்துக்கொண்டு வரும். அந்த இடத்தில் பேப்பர் ரோல் நன்கு பதிந்து பின் மண் மூடிக்கொள்ளும். 5, 6 நாட்களில் பேப்பர் மக்கி நல்ல இடைவெளியில் விதைகள் மண்ணில் பதிந்துவிடும். அத்துடன் அதில் சேர்க்கப்பட்டுள்ள வேப்பம்பிண்ணாக்கு மற்றும் கடலை பிண்ணாக்கு மண்ணில் நன்கு கலந்து விடும். இந்த முறையிலான விதைப்பில் களை எடுப்பது மிக சுலபம் என்றார்.

குளிர் சாதன கருவியில் பயன்படுத்தக்கூடிய அரை ஹெச்.பி மோட்டார், கிரைண்டரில் பயன்படுத்தக்கூடிய உதிரிபாகங்கள் பயன்படுத்தி இந்த கருவியை உருவாக்கியுள்ளேன்.  இதில் சுழலக்கூடிய டிரம் உள்ளது. இந்த டிரம்மில் அரை அடி இடைவெளியில் துளைகள் அமைக்கப்பட்டுள்ளது. டிரம்மில் விதை நெல்லையும், பிண்ணாக்கையும் கொட்டி விட வேண்டும். டிரம் சுழலும் போது விதை நெல் பேப்பரில் விழுந்து, பின் அந்த பேப்பர் மடிக்கப்பட்டு வெளிவரும். மடிக்கப்பட்ட பேப்பரில் அரை அடி இடைவெளியில் விதை நெல் இருக்கும். பேப்பர் நன்கு மடிக்கப்பட்டிருப்பதால் விதைநெல் நகராது. பின்னர் பேப்பர் ரோலை விதை கருவியில் பொருத்தி வயலில் விதைக்கலாம்.

ஒரு ஏக்கர் விதைப்புக்கு 20 ஆயிரம் நீல அடி பேப்பர், 5 கிலோ விதை நெல், 2.5 கிலோ வேப்பம்பிண்ணாக்கு, 2.5 கிலோ கடலைபிண்ணாக்கு, போதுமானது. பேப்பர் ரோலில் விதை நெல்லை பேக்கிங் செய்ய 4 மணி நேரம் ஆகும்.

இந்த இயந்திரத்தை உருவாக்குவதற்கு மொத்தமாக 11,000 செலவானது. இந்த இயந்திரத்திற்கான காப்புரிமை கிடைத்த பிறகு நியாயமான விலையில் தயாரித்து விற்பனை செய்யலாம் என்ற எண்ணம் உள்ளது.  இந்த கருவியை பயன் படுத்தி விதைப்பதால் வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். விதைப்பு சுலபம், இயந்திரத்தை பராமரிப்பதும் சுலபம்.  ஆட்கள், தண்ணீர், நேரம் அனைத்திற்கும் தீர்வாக உள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் ரமேஷ்.  

நன்றி
பசுமை விகடன்

K.Sakthipriya
Krishi Jagran 

English Summary: A New invention with Paper Roll : Farmer Ramesh succeeded on His New Paddy Sowing Equipment

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.