Krishi Jagran Tamil
Menu Close Menu

இயற்கையோடு இணைந்தே பயணிக்க, இதோ வந்துவிட்டது மூங்கில் தண்ணீர் பாட்டில்

Thursday, 15 August 2019 01:30 PM
Bamboo Water Bottle

இயற்கை நமக்கு அளப்பரிய வளத்தை கொடுத்துள்ளது. மனிதர்களாகிய நாம் தான் அவற்றை அறிந்து முறையாக பயன்படுத்தி கொண்டால் பூமி வெப்பமயமாதலில் இருந்து தடுக்க முடியும். அழிக்க முடியாத பிளாஸ்டிக்கள் பூமிக்கு மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களுக்கும் ஆபத்தானவை. நம்மால் முடிந்த வரை இயற்கையோடு இணைந்தே பயணிப்போம். இதற்கு எடுத்துக்காட்டாக அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் மூங்கிலாலான தண்ணீர் பாட்டில் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

பூமி வெப்பமயமாதலுக்கு எதிராகவும், பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு ஆதரவாகவும் இவர் எடுத்துள்ள முயற்சினை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த 'ட்ரீட்டிமன் போரா' என்பவர் மூங்கிலினால் ஆனா தண்ணீர் பாட்டில் ஒன்றை உருவாக்கியுள்ளார். இது போன்ற பாட்டில் உருவாக்குவதை குறித்து பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து இறுதியாக உருவாக்கி வெற்றியும் கண்டுள்ளார். இவர் உருவாக்கிய இந்த பாட்டில் பல்வேறு  சோதனைகளை கடந்து மக்கள் பயன்படுத்தலாம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Dhritiman Bora

முன்னாள் ஐ.ஐ.டி மாணவரான இவர், உருவாக்கிய இந்த பாட்டில் பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. சுற்று சுழலலுக்கு ஏற்றது, மக்கும் தன்மை கொண்டது. இதை பிளாஸடிக் பாட்டில் பயன்படுத்துவது போல கழுவி மீண்டும் மீண்டும் பயன் படுத்தலாம். மற்றுமொரு சிறப்பான செய்தி என்னவென்றால் இதில் ஊற்றி வைக்கும் நீர் குளிர்ச்சியாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு பாட்டில் உருவாக்க 3 முதல் 4 மணி நேரம் தேவை படுவதாக தெரிவித்துள்ளார். ஒரு பாட்டிலின் விலை ரூ 400 முதல் ரூ 600 வரை விற்கப் படுகிறது. பாட்டிலின் அளவை பொறுத்து விலை மாறுபடும்.

தண்ணீர் சிந்தாமல் இருக்க அதன் மூடிகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. வெளியில் எடுத்து செல்வதற்கு எளிதாகவும் பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும் அமைந்துள்ளது. இவருடைய முயற்சி மற்றவர்களுக்கு முன் மாதிரி எனலாம். இது குறித்து மேலும் தகவல்களுக்கு http://www.tribalplantes.com/ என்ற இணையதளத்தை அணுகலாம்.

Anitha Jegadeesan
Krishi Jagran 

Eco – Friendly Bamboo Bottle IIT Ex- Student Against Global Warming Bio degradable Tribal Plants Assam Man Invention Dhritiman Bora
English Summary: Eco-Friendly Bamboo Bottles for Daily Use: Available at Different Ranges

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Monsoon 2020 update on Krishi Jagran Tamil Help App

Latest Stories

  1. குறைந்த முதலீடு - நிறைந்த வருமானம் - சிறு சிறு தொழில் செய்யலாம் வாங்க!!
  2. காதி அகர்பத்தி சுயசார்பு இயக்கம் மூலம் ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு - மத்திய அரசு திட்டம்!!
  3. வெறும் 12 ரூபாயில், ரூ.2 லட்சத்திற்கான விபத்துக் காப்பீடு பெற விருப்பமா? - விபரம் உள்ளே!
  4. கால்நடைகளுக்கான அவசர முதலுதவி சிகிச்சை முறைகள்!
  5. ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கும் தமிழக அரசின் திட்டம் - மானாவாரி விவசாயிகளுக்கு அழைப்பு!
  6. ஹெக்டேருக்கு ரூ.2,500 வழங்கும் தமிழக அரசின் திட்டம் -பெறுவதற்கான வழிமுறைகைள்!
  7. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாக வாய்ப்பு - வானிலை மையம்!!
  8. மத்திய அரசின் தங்கமான தங்க சேமிப்பு பத்திரம் - வெளியீடு இன்று தொடங்குகிறது!
  9. மண்பாண்டங்களின் மகத்துவங்கள்!- மனம் திரும்பினால் ஆரோக்கியம் உங்கள் கையில்
  10. 10000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்க திட்டம் - மத்திய அரசு!!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.