1. வெற்றிக் கதைகள்

விலங்கு & பூச்சிகளிடமிருந்து பயிர்களைக் காக்கும் "ஹெர்போலிவ் பிளஸ்"!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

பூச்சிகள் மற்றும் விலங்குகளால் பயிர்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. வட மாநிலங்களில் பயிர்களைச் சூறையாடிவரும் லோகஸ்ட் -பாலைவன வெட்டுக்கிளிகளை நாம் இன்னும் மறந்துவிடவில்லை. நம் ஊரிலும் காட்டுப் பன்றிகள், யானைகள், அணில்கள் என விலங்குகளாலும், பறவைகள், ஈக்கள், வண்டுகள் எனச் சிறு சிறு பூச்சிகளாலும் பயிர்கள் பாதிக்கப்பட்டு மகசூல் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.

விளைநிலங்களை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பது என்பது தற்போதைய சூழுலில் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், பயிர்களுக்கு ஊரமூட்டும் வகையிலும் இயற்கை முறையில் ஹெர்போலிவ் பிளஸ் (Herboliv plus) என்ற திரவ மருந்தினை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறார் ஈரோடு மாவட்டம், கோப்பிச்செட்டிபாளையத்தை சேர்ந்த ஜி.வி சுதர்ஷன் (G.V Sudharshan) அவர்கள்.

இளங்கலை வேதியியல் B.Sc (Bio chemisty) பட்டதாரியான இவரின் குடும்பம் மூன்று தலைமுறையாக இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கிருஷி ஜாக்ரன் தமிழ்நாடு இணையதள ஃபேஸ்புக் பக்கத்தின் மூலமாக நடைபெற்ற ''Farmer the Brand'' நேரலை நிகழ்ச்சியில் பேசினார். அதில், ஈரோடு மாவட்டத்தில், கடந்த 2006ம் ஆண்டு முதல் வன விலங்குகள் மற்றும் பறவைகளால் விளைநிலங்களை அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், இதனை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த புதிய முயற்சியில் ஈடுப்பட்டு அதற்கு பலனும் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார். 

தாம் தயாரித்த இந்த புது வகை ஹெர்போலிவ் பிளஸ் குறித்து விவரிக்கும் ஜி.வி சுதர்ஷன், தனது தந்தையுடன் சேர்ந்து இதற்கான கண்டுபிடிப்பு முயற்சியில் இரண்டு ஆண்டுகள் ஈடுபட்டதாகவும், அதன் பயனாகவே, விலங்குகளுக்கு, மனிதர்களுக்கும், பயிர்களுக்கும் ஆபத்து இல்லா வண்ணம் இயற்கை முறையில் இந்த புது கண்டுபிடிப்பு அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறினார்.

காப்புரிமை பெறப்போகும் ஹெர்போலிவ் பிளஸ்

தனது இந்த ஹெர்போலிவ் பிளஸ் இயற்கை மருத்து பயன்பாட்டுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், ஈரோடு மைராடா கிருஷி விக்யான் கேந்திர உள்ளிட்டவை ஆய்வுக்கு உட்படுத்தி நற்சான்றிதழ் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். காப்புரிமை (patent  Herboliv plus Animal repellent) பெரும் முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஹெர்போலிவ் பிளஸ் பயன்பாடு ( Multi-purpose use of herboliv plus)

இந்த இயற்கை மருந்தை, பல்வேறு முறையில் பயன்படுத்தலாம் எனக் குறிப்பிடும் சுதர்ஷன், இதன் 7 சிறப்பம்சங்கள் குறித்து விவரித்துள்ளார். இந்த ஹெர்போலிவ் பிளஸ் விளைநிலங்களில் தெளிக்கப்படும் போது.

  • பயிர் ஊக்கியாகவும்

  • பூச்சி விரட்டியாகவும்

  • பூஞ்சான்களைக் கட்டுப்படுத்தும்

  • மண் வளத்தை அதிகரிக்கச் செய்யும்

  • பயிர்களின் தரத்தை அதிகரிக்கும்

  • தண்ணீர் இருப்பு தன்மையை அதிகரிக்கும்

  • மிக முக்கியமாக வன விலங்கு விரட்டியாகவும், பறவை விரட்டியாகவும் செயலாற்றுகிறது என்றார்.

இந்த இயற்கை மருந்தினை நெல், காய்கறி, பழங்கள் போன்ற அனைத்து வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். வன விலங்கு தொல்லை அதிகம் காணப்பட்டால் முதல் மாதம் 10 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்த வேண்டும். அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை இதனை பயிர்களின் மீது தெளிக்கும் போது நல்ல மகசூல் கிடைக்கும் என்றார்.

எப்படி பயன்படுத்த வேண்டும்

வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க பின்பற்ற வேண்டிய அளவு முறைகள்

  • 1லிட்டர் மருந்தினை 9லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களுக்கு தெளிக்கவேண்டும்.

  • குரங்கு, கிளி, அணில் போன்றவற்றுக்கு 2 லிட்டர் மருந்தை 8 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

இந்த திரவத்தினை பயிர்களில் தெளிப்பதன் மூலம் அதன் வசனை மட்டும் சுவை மூலம் வனவிலங்குகளைப் பயிர்களுக்கு அருகில் அண்ட விடாமல் தடுக்கும் மேலும் இதனை பயன்படுத்துவதால் ஒரு ஏக்கருக்கு ரூ.2000 முதல் ரூ.3000 வரை செலவாகும் என்று கூறும் சுதர்ஷன், நல்ல மகசூல் பெற முடியும் என்றும் கூறுகிறார்.

விவசாயிகளை முதலாளியாக்கத் திட்டம்

இந்த இயற்கை மருந்தினை பயன்படுத்தி விளைவிக்கும் நெல்லுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதால், நெல்லை அரிசியாக மாற்றி அதனை விவசாயிகளின் பெயர்களிலேயே சந்தைப்படுத்தும் முயற்சியில் மைராட கிருஷி விக்யான் கேந்ரா (Myrada Krishi Vigyan Kendra) மூலம் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார்.

வெட்டுக்கிளிக்கும் எதிரான இயற்கை மருந்து

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (indian Council of Agricultural Research) மூலம் ராஜஸ்தானில் இந்த ஹெர்போலிவ் பிளஸ் மருந்தை பருத்தி செடிகளில் வெட்டுக்கிளிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டபோது, நல்ல முடிவுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த இயற்கை மருந்தின் வாசனை மற்றும் சுவை காரணமாக வெட்டுக்கிளிகள் தானாக சாகும் என்றும் இதனால் அதிக ரசாயனம் இன்றி பயிர்கள் பாதுகாக்கப்படும் என்றார் சுதர்ஷன். 

இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.miviproproducts.com/team என்ற இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம், தொடர்பு எண்: 98430 68291

மேலும் படிக்க.... 

தாய்ப்பாலுக்கு நிகரான இன்பம் தேங்காய் பால் வெர்ஜின் எண்ணெய்! விற்பனையில் அசத்தும் புதுக்கோட்டைக்காரர்!

#FarmertheBrand: மண்ணை பொன்னாக்கும் புதுக்கோட்டைப் பெண்மணி!

சிறுதானியங்களை சீவல்-ஆக மாற்றி விற்பனையில் அசத்தும் ஈரோடு ராஜமணிக்கம்!

English Summary: An innovative prodcut by Erode farmer "Herboliv Plus Which is used to Protec Crops from Animal and Pests Published on: 26 July 2020, 03:24 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.