1. வெற்றிக் கதைகள்

ரிட்டயர்மெண்ட் வயது வரம்பை உயர்த்த EPFO அட்வைஸ்

R. Balakrishnan
R. Balakrishnan
Retirement age

பென்சன் அமைப்பை பாதுகாப்பதற்கும், போதிய ரிட்டயர்மெண்ட் பலன்களை வழங்குவதற்கும் இந்தியாவில் பணி ஓய்வு வயது வரம்பை உயர்த்த வேண்டும் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) தெரிவித்துள்ளது. EPFO நிறுவனம் 2047ஆம் ஆண்டுக்கான தொலைநோக்கு ஆவணத்தை வெளியிட்டுள்ளது. அதில், “மற்ற நாடுகளின் அனுபவங்களையும், பென்சன் அமைப்பை தொடர்ந்து நிலைத்திருக்க செய்யவும் இந்தியாவில் பணி ஓய்வு வயது வரம்பை உயர்த்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

பணி ஓய்வு வயது (Retirement Age)

இந்தியா தற்போது இளைஞர்கள் மிகுதியான நாடாக இருக்கிறது. ஆனால், அதே நேரம் அதிகளவிலானவர்கள் முதுமையடைந்து வருகின்றனர். 2047ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 14 கோடி பேர் 60 வயதை தாண்டியிருப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பென்சன் அமைப்பை நிலைத்திருக்க செய்வதற்கு இந்தியாவில் பணி ஓய்வு வயது வரம்பை உயர்த்த வேண்டும் என EPFO கூறுகிறது. ரிட்டயர்மெண்ட் வயது வரம்பை உயர்த்துவதால் என்னாகும்? EPFO நிறுவனத்திலும், இதர பென்சன் நிதிகளிலும் நீண்டகாலத்துக்கு டெபாசிட்டுகள் அதிகரிக்கும். இதனால் பணவீக்கத்தை சமாளிக்க முடியும்.

EPFO இந்த ஆவணத்தை மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ளது. இதுகுறித்து அரசுகள், நிறுவனங்கள், தொழிலாளர்கள் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய பென்சன் திட்டத்தை நிர்வகித்து வரும் பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA-உடன் EPFO பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. EPFO நிறுவனத்துக்கு தற்போது சுமார் 6 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். இவர்களது வருங்கால வைப்பு நிதி (PF), பென்சன் என மொத்தமாக EPFO நிறுவனத்திடம் சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் நிதி உள்ளது.

EPFO நிறுவனத்துக்கு தற்போது சுமார் 6 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். இவர்களது வருங்கால வைப்பு நிதி (PF), பென்சன் என மொத்தமாக EPFO நிறுவனத்திடம் சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் நிதி உள்ளது.

மேலும் படிக்க

1.14 லட்சம் கோடி ரூபாய் ரீபண்ட்: வருமான வரித்துறை தகவல்!

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்: கணிணிமயமாகும் ஓய்வூதிய ஆவணங்கள்!

English Summary: EPFO Advises to Raise Retirement Age Limit Published on: 05 September 2022, 11:25 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.