1. கால்நடை

Colostrum : பசுங்கன்றுகளுக்கு சீம்பாலின் அவசியம்!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Cow

Credit by : Blodsky Tamil

சீம்பால் (Colostrum) என்பது கன்று ஈன்ற பிறகு பசுக்களால் முதல் சில நாட்கள் (2-4 நாட்கள்) வரை உற்பத்தி செய்யப்படும் அடர்த்தியான, மஞ்சள் நிறம் போன்ற பால் ஆகும். இந்த பால் அதிக அளவு நோய் எதிர்ப்புசக்திகள், புரதம், ஆற்றல் (கொழுப்பு) மற்றும் வைட்டமின்களைக் கொண்டுள்ளது.

சீம்பாலின் நன்மைகள்

1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

2. கன்று எடையை அதிகரிக்கச்செய்கிறது

3. கழிச்சல் பாதிப்பை குறைகின்றது

4. கன்றுகளின் இறப்பு விகிதத்தை குறைக்கிறது

 

சீம்பால் கலவை /சாதாரண பால் கலவை

கலவைக்கூறு

பசு சீம்பால் கலவை

எருமை சீம்பால் 
கலவை

சாதாரண  பால் கலவை

 

உலர் ஊட்டசத்துக்கள்

↑↑ 28.30

 

↑↑ 31.0           

 

12.86

மொத்த புரதம்

↑↑ 21.32

↑↑ 23.8

3.34

கொழுப்பு

0.15-1.2

4.0

4.0

லாக்டோஸ்

2.5

2.2

4.8

சீம்பால் கொடுக்க வேண்டிய நேரம் மற்றும் அளவு

சீம்பாலின் முழுச்சிறப்பும் கன்றுகளுக்கு போய்ச் சேர வேண்டுமானால் கன்று பிறந்து 15-30 நிமிடங்களில் சீம்பாலை உட்கொள்ளுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் கன்றுகளின் சிறுகுடல் பிறந்த 10 முதல் 12 மணி நேரம் வரை தான் நோய் எதிப்புச் சக்திப் பொருளை அதிகமாக உட்கிரகிக்கும் தன்மை படைத்தது. கன்று பிறந்த 24 மணி நேரத்திற்குப் பிறகு சீம்பாலிலுள்ள நோய் எதிப்பு புரதங்களைக் கன்றினால் உட்கிரகித்துக் கொள்ளும் தன்மை குறைகிறது. ஆகையால் கன்று பிறந்த 6 மணி நேரத்திற்குள் அதிக சீம்பால் குடிக்க வைத்தால் அதிக பலன் கிடைக்கும்.

 

Cow

பொதுவாக ஒரு கன்றுக்கு அதன் உடல் எடையில் குறைந்தது 5-6 கி என்ற வீதத்தில் சீம்பால் கொடுக்க வேண்டும். அதாவது 30 கிலோ எடையுள்ள கன்றுக்கு 1.8 கிலோ சீம்பால் தேவைப்படுகிறது. இச்சீம்பால் 3-4 வேளைகளில் 6 மணி நேர இடைவெளியில் கொடுக்கலாம்.

 

 நேரம்
(கன்று பிறந்த பிறகு )

சீம்பால் அளவு(கன்றின் உடல் எடையில்)

15-30 நிமிடங்கள் – 10%

 

5-6 %

10-12 மணி நேரம்

 

6-8 %

2 வது நாள் 

10%

 

3 வது நாள்

10%

 

தாயிடமிருந்து சீம்பால் கிடைக்காத கன்றுக்கு சீம்பால் கொடுக்கும் முறை

கன்று பிறந்தவுடன் தாய்ப்பசு இறந்தாலோ அல்லது மடிவீக்க நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்றாலோ பிறந்த கன்றுகளுக்கு சீம்பால் கிடைக்காமல் போகலாம். அச்சமயங்களில் வேறு பசுக்களின் சீம்பாலை அல்லது கிழ்கண்டவாறு சீம்பால் மாற்றுக் கலவையோ தயாரித்துக் கொடுக்கலாம்.

சீம்பால் மாற்று கலவை மாதிரி

  • பால் - 500 கிராம்

  • விளக்கெண்ணெய் - 1 முதல் 2 ஸ்பூன் அளவு

  • மீன் எண்ணெய் - 1 ஸ்பூன்

  • பச்சை கோழி முட்டை - ஒன்று

  • வெந்நீர் - 300 மி.லி

  • அவசர காலத்துக்கு இது ஒரு வேளைக்குத் தேவையான அளவாகும். இக்கலவை சீம்பாலுக்கு மாற்றுதானே தவிர, சீம்பாலே சிறந்த உணவாகும்.

சேமித்து வைக்கப்பட்ட சீம்பால் பயன்படுத்தும் முறைகள்

அளவுக்கு அதிகமாக சீம்பாலை 4 டிகிரி செல்சியஸ் வைத்து 7 நாட்களும், -20 டிகிரி செல்சியஸ் வைத்து 10-15 நாட்களும் சேமித்துப் பயன்படுத்தலாம். இவ்வாறு சேமித்து வைக்கப்பட்ட சீம்பாலை கன்று உடல் வெப்பநிலைக்கு (37 டிகிரி செல்சியஸ் வைத்து) கொண்டு வந்து கன்றுகளுக்கு பாட்டில் மற்றும் நிப்பிள் மூலம் தரவேண்டும். நேரடியாகச் சூடுபடுத்துவதைத் தவிர்த்தல் நல்லது. ஏனெனில் 42 டிகிரி செல்சியஸீக்கு மேற்பட்ட வெப்பநிலையில் சீம்பால் நோய் எதிப்பு திறன் இழக்கப்படுகிறது.

முனைவர்.ஆ. கோபாலகிருஷ்ணன்
மருத்துவர்.மு.பாரதிதாசன்
உதவி பேராசிரியர்,
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
வேப்பேரி, சென்னை 600 007

மேலும் படிக்க.... 

கேன்சர் கில்லர் என்று சொல்லப்படும் முள் சீத்தா பழம்! அதன் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு!

காளான்களை பதப்படுத்தும் மற்றும் விற்பனை முறைகள்!

கொரோனா நெருக்கடியால் 80% வருவாய் இழப்பு - சிறு-குறு, நடுத்தர நிறுவனங்கள் தவிப்பு!

English Summary: Health Benefits of Colostrum Supplements, the first milk you produce when starting breastfeeding, is the ideal nourishment for a newborn

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.