1. கால்நடை

தாது உப்புகளின் முக்கியத்துவமும், கால்நடைகளின் வளர்ச்சியும்

KJ Staff
KJ Staff

கால்நடைகளின் உடலில் சுமார் 25 சதவீதம் தாது உப்புகள் உள்ளன, ஆனால் தாது உப்புகளின் தேவை  நாள்தோறும் அதிகமாக உள்ளது.பற்றாக்குறை ஏற்படின் நோய்கள்  உருவாக வாய்ப்பு உள்ளது.கால்நடைகளின் உடல் வளர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் உற்பத்திதிறன் ஆகியவற்றுக்கு தாது உப்புக்கள் முக்கியத் தேவையாக இருக்கின்றன.

தாது உப்புக்கள் அனைத்தும் உடலில் உள்ள நொதிப்பொருட்களை ஊக்குவித்து அவற்றின்   செயல்பாடுகளை  உறுது செய்கிறது. பற்றாக்குறை ஏற்படின்  செயல்திறன் பாதிக்கப்பட்டு, மலட்டுத்தன்மை, குறைந்த அளவு பால் சுரப்பு போன்றவை ஏற்படுகிறது. கால்நடைகளின் முழுவளர்ச்சியும் பாதிக்கப்பட்டு, முறையான இடைவெளியில் சினைக்கு வராமல்  மற்றும் சினை தரிக்காமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சினையான கால்நடைகளுக்கு  கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில், குட்டிகள் இறந்து பிறக்கவும் வாய்ப்புள்ளது.

கால்நடைகளுக்கு கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம், துத்தநாகம் மற்றும் கோபால்ட் போன்ற தாதுப்புகள் மிகவும் அவசியமானதாகும். ஆனால் அவை கால்நடைகளின் தீவனத்திற்கு ஏற்ப மாறு படுகிறது.  கால்நடைகளுக்கு அளிக்கும் கலப்புத் தீவனம், பசுந்தீவனம் மற்றும் உலர்தீவனம் மூலம் தாது உப்புக்களின் அளவு மாறு படுகிறது.

தாது உப்புகளின் நன்மைகள்

  • கால்நடைகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி திறன் அதிகரிக்கும்.

  • ஆரோக்கியம், இனப்பெருக்கத்திறன் மேம்படுத்தும்.

  • கால்நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

  • 15 முதல் 18 மாத இடைவெளியில் மீண்டும் சினை தரிக்கும் திறன் அதிகரிக்கும்.

  • பால் உற்பத்தி அதிகரிக்கும்.

 தாது உப்புக்கலவை கொடுக்க வேண்டிய  அளவு

  • கன்றுகளுக்கு 5 கிராம்,

  • கிடேரிகளுக்கு 15 - 20 கிராம்,

  • கறவை மாடுகளுக்கு 40 - 50 கிராம்,

  • கறவை வற்றிய மாடுகளுக்கு 25 - 30 கிராம்,

  • ஆடுகளுக்கு 10 கிராம் என்ற அளவில் கொடுக்க வேண்டும்.

English Summary: Lack of mineral salts

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.