Krishi Jagran Tamil
Menu Close Menu

இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலில் கிடைக்கப்படும் இந்த சைனேன்சியா வெருகோசா

Wednesday, 04 September 2019 05:22 PM
Stone fish mating

சைனேன்சியா வெருகோசா "Synanceia Verrucosa"  என்ற விலங்கியல் பெயர் கொண்ட இந்த மீன் தமிழில் கல்மீன் என அழைக்கப்படுகிறது. உலகில் கொடிய விஷத் தன்மை கொண்ட மீன் வகைகளில் இதுவும் ஒன்றாகும். இது சினான்சீடே குடும்பத்தை சேர்ந்தது. இவை இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் வசிப்பவை. சீனா, ஜப்பான், ஆகிய ஆசிய நாடுகளில் இந்த கல்மீன் சுவைத்து உண்ணப்படுகிறது.

சைனேன்சியா வெருகோசா

இந்த கல்மீனானது ஆழ்கடலில் பாறைகளுக்கிடையே கற்களைப்போல்  மறைந்திருக்கும். பாறைகளுக்கு இடையில் இருப்பதால் நம் கண்களை ஏமாற்றி விடும்.

இனங்கள்

இதில் ஐந்து இனங்கள் உண்டு.

reef stone fish

நிறம்

பார்ப்பதற்கு கல் போன்று பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும் இந்த மீன் சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் ஆங்காங்கே காணப்படும்.

ஆயுள்

இதன் ஆயுள் 5 முதல் 10 வருடங்கள் ஆகும். நீருக்கு வெளியில் வந்தாலும் 24 மணி நேரம் உயிர் வாழும் வல்லமை கொண்டது. 14 முதல் 20 அங்குல நீளம் வரை வளரும். இரண்டே கால் கிலோ எடை வரை இருக்கும்.

வசிப்பிடம்

இதன் வசிப்பிடம் பவளப்பாறைகள் மற்றும் ஆழ்கடல் பாறைகள் ஆகும்.

முட்டைகள்

கல்மீன் நீருக்குள் லட்சக்கணக்கான முட்டைகள் இடும். குஞ்சு பொரித்து வெளிவந்த மீன்களை மற்ற மீன்கள் தின்று விடும். இறுதியில் தப்பித்த மீன்களே வளருகின்றன.

முட்கள்

இதன் முதுகுப்புறத்தில் கத்திபோல் 13 விஷத்தன்மை கொண்ட முட்கள் உள்ளன. இடுப்பு பகுதியில் இரண்டு முட்களும், பின் பகுதியில் மூன்று முட்களும் காணப்படும். இவை தோலுக்குள் மறைந்த்திருக்கும். ஆபத்தான நேரங்களில் முட்களை பெரிதாக்கிவிடும். 

poisonous synanceia verrucosa

விஷத்தன்மை

ஒவ்வொரு முட்களுக்கு அடியிலும் சுரப்பிகள் உள்ளன. சுரப்பிகளில் அழுத்தம் ஏற்படும் போது விஷம் வெளியேறும். அழுத்தம் அதிகமாக இருந்தால் அதிக விஷம் வெளியேறும், பின் இரண்டு வாரங்களில் காலியான விஷப் பை நிரம்பி விடும்.

இதன் முட்கள் மனிதர்களை தாக்கி விட்டால், 2 மணி நேரத்தில் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு, திசு அழுகல், முடக்கு வாதம், பக்கவாதம் ஏற்பட்டு விடும். விஷம் அதிகமானால் இறுதியில் மரணமே. 

ஊனுண்ணி

இவை இறால் மீன்கள், பல்வகை சிறிய மீன்களை உண்ணும். இறை பக்கத்தில் நெருங்கியதும் நிமிடத்தில் விழுங்கிவிடும். மொத்த தாக்குதலும் 0.015 நொடியில் நடந்து விடும்.

எதிரிகள்

திருக்கை மீன்களும், மகா வெள்ளை சுறா, புலிச் சுறா ஆகிய பெரிய சுறா மீன்கள் இந்த கல்மீன்களை எளிதில் விழுங்கிவிடும்.

https://tamil.krishijagran.com/animal-husbandry/worlds-most-poisonous-species-puffer-fish-japanese-street-food-fugu-true-facts/

k.Sakthipriya
Krishi Jagran

Synaceia Verrucosa stone Fish poisonous Fish unique and deadly reef stone fish Indain ocean Pacific Ocean
English Summary: One of the poisonous Fish Synaceia Verrucosa: Truth Information Lifestyle of stone Fish

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இலவச சட்ட உதவி! உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அறிவிப்பு!
  2. நிவர் & புரெவி புயலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கும், ஆடு, மாடுகளுக்கும் நிதியுதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!
  3. Canara Bank Job offer: 220 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!!
  4. இயந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு ரூ.5000 மானியம்!!
  5. மானித்தில் கரும்பு விவசாய இயந்திரங்கள் - சர்க்கரை ஆலை அழைப்பு!
  6. TNAUவின் புதிய பயிர் வளர்ச்சி ஊக்கி தொழில்நுட்பம்- காப்புரிமை வழங்கியது மத்திய அரசு!
  7. மழைக்காலங்களில் கால்நடைகளைக் கலங்கடிக்கும் எலிக்காய்ச்சல் - கட்டுப்படுத்துவது எப்படி?
  8. ஒரு அங்குலம் மண் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் தெரியுமா?
  9. சேலம் பழச்சந்தைக்கு கொய்யா வரத்து அதிகரிப்பு: கிலோ ரூ40 முதல் ரூ50க்கு விற்பனை!
  10. கனமழையால் ஏரி உடைப்பை சரிசெய்த விவசாயிகள்!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.