Krishi Jagran Tamil
Menu Close Menu

சைனைடை விட கொடிய விஷத்தன்மை கொண்ட பேத்தை மீனின் உண்மைத் தகவல்

Saturday, 03 August 2019 10:11 AM
Puffer fish

உலகில் உள்ள மீனினங்களில் விஷத் தன்மை கொண்ட மீன் வகைகள் பல உள்ளன. இதில் மிக கொடிய விஷத்தன்மை கொண்ட, பேத்தை என்று அழைக்கப்படும் (Puffer fish)  "புப்பர் பிஷ்" நம் இந்தியாவிலும் அதிகம் காணப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

பாதிப்பு

இதன் நஞ்சு முதலில் மனிதனின் உடலில் உதடுகள் மற்றும் நகங்களில் தனது பாதிப்பைக் காட்டும். கொஞ்சம் கொஞ்சமாக உதடுகள் மற்றும் நகங்கள் மரத்துப்போகும். உடல் தனது கட்டுப்பாட்டை இழந்து சுவாசம் விடுவதை சிரமமாக்கி மரணத்தை உண்டாக்குகிறது.

"புப்பர் பிஷ்"  பற்றிய அறிய தகவல்

fugu Skeleton

இது ஒரு வகை வினோதமான கடல் மீனாகும். பேத்தை, பேத்தா, தவளை மீன், முள்ளம்பன்றி மீன், பலாச்சி என பல்வேறு வினோதமான பெயர்கள் கொண்டவை. இதை ஆங்கிலத்தில் (Puffer fish)  "புப்பர் பிஷ்" என்பர்.

பேத்தை மீன்களின் அமைப்பு மனித முகம் போல் அமைந்திருக்கும். இது ராமேஸ்வரத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது அதிக நச்சுத் தன்மைக் கொண்ட மீன் இனங்களில் இதுவும் ஒன்று. இம்மீன் வகைகளில் மொத்தம் 120 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் பல வண்ணங்களில், வித்தியாசமான உடலமைப்புடன் காணப்படுகிறது.

ஜப்பானில் இது "ஃபுகு" (Fugu) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள இம்மீனானது தன் உடலை 10 மடங்கு பெரிதாக்கிக் கொள்ளும்.

இந்த ஃபுகு மீனானது உலகில் முதுகெலும்புள்ள கொடிய வகை உயிரினங்களில் 2 வது இடத்தில் உள்ளது. தன் உடலில் உள்ள ஒவ்வொரு பகுதிகளிலும் நச்சுத்தன்மையை முழுவதுமாக அடக்கியுள்ளது. இதன் உடலின் மேற்பரப்பில் முட்கள் சூழ்ந்திருக்கும், மற்றும் தலை பகுதியில் அதிகளவில் நச்சுத்தன்மை உள்ளது.

puffer

இது தனது உடலில் (tetrodotoxin) டெட்ரோடோடோக்ஸின் என்ற நஞ்சை  உருவாக்குகிறது. இதன் நஞ்சானது ஒரே நேரத்தில் 30 பேரைக் கொள்ளக்கூடியது. சைனைடை விட 1000 மடங்கு விஷம் இதன் உடலில் உள்ளது. மேலும் இதன் நஞ்சை முறியடிக்க இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப் படவில்லை.

இவ்வளவு நச்சுத்தண்மை கொண்ட இந்த பேத்தை மீனானது ஜப்பானில் அதிக விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மலிவான விலையில் கிடைக்கும் இந்த ஃபுகு மீன் ஜப்பானில் $20 வரை விலை போகிறது மற்றும் அந்நாட்டில் ஆண்டிற்கு 10 ஆயிரம் டன் வரை உண்ணப் படுகிறது. இம்மீன் மூலம் தயாரிக்கப்படும் ஓர் உணவின் விலை 14 ஆயிரம்.

ஜப்பானில் இந்த மீனை சமைக்க தனி படிப்பு உண்டு. அதில் இரண்டு ஆண்டுகள் சிறப்பு பயிற்சியும், சான்றிதழும் முறையாக பெற்றவர்கள் மட்டுமே ஃபுகு மீனை சமைக்க முடியும். சமைத்தவர்கள் ஏதேனும் தவறு செய்தால் அதுவே அவர்களுக்கு கடைசி உணவாகும்.

 

https://tamil.krishijagran.com/animal-husbandry/the-price-of-this-fish-is-the-price-of-the-fish-in-the-world/

https://tamil.krishijagran.com/animal-husbandry/how-many-of-them-know-about-fish-here-are-some-interesting-facts-explore-the-aquaculture/

K.Sakthipriya
Krishi Jagran

Puffer Fish Fugu Worlds most poisonous Species Japanese street Food tetrodotoxin poisonous

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

Latest Stories

  1. செங்காந்தள் விதைக்கு விலை நிர்ணயம்: விவசாயிகளுக்கு அரசு கடன் உதவி
  2. உழுபவர்களுக்கும், உண்பவர்களுக்கும் நன்மை தரும் சிறுதானியம்
  3. மண்பானை விற்பனை அதிகரிப்பு: வியாபாரிகள் மகிழ்ச்சி
  4. மண் வளத்தை காக்க சணப்பை சாகுபடி: துறை வல்லுநர்கள் ஆலோசனை
  5. களப்பயிற்சியுடன் கூடிய இலவச வகுப்பு: கால்நடை மருத்துவ பல்கலை கழகம் அறிவுப்பு
  6. கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அழைப்பு
  7. வேளாண் அறிவியல் நிலையம் நடத்தும் ஒரு நாள் இலவசப் பயிற்சி
  8. பருவநிலை மாற்றத்தை எதிர்த்து வளரும் பழமை வாய்ந்த சிறுதானியம்
  9. இதயக்கோளாறுகளை சரி செய்ய உதவும் இயற்கை நிவாரணி: சிக்கு என்னும் `சீமை இலுப்பை'
  10. குறைந்து வரும் உற்பத்தி: இழப்பை தடுக்க தோட்டக்கலைத்துறையினர் ஆலோசனை

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.