1. கால்நடை

கோழி முட்டைகள்! உற்பத்தித் திறனை அதிகரிக்க அடைகாத்தல் முறை

KJ Staff
KJ Staff
hatching of eggs

கோழிக்குஞ்சுகளின் உருவாக்கமே அடைகாத்துக் குஞ்சு பொரித்தல் எனப்படுகிறது. முந்தைய நாட்களில் தாய்க்கோழியின் அடையில் வைத்தே குஞ்சுகள் பொரிக்கப்பட்டன. தேசிய இனக் கோழிகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். இதில் ஒரு நேரத்தில் 10-12 முட்டைகள் மட்டுமே 1 கோழியினால்  அடைக்காக்க முடியும்.

ஆனால் பெரிய பண்ணை உற்பத்தி முறைகளுக்கு இவை கடினமாக இருக்கும் காரணத்தால் அடைகாப்பான் மூலம் குஞ்சு பொரித்தல் பயன்படுத்தப்படுகின்றன .

அடைகாத்தல்

incubator

வெப்பநிலை, ஈரப்பதம், வாயுச்சூழ்நிலை மற்றும் முட்டைகளைத் திருப்பி விடுதல் போன்ற இயற்கைக் காரணிகள் ஒரு வெற்றிகரமான குஞ்சு பொரிப்பதற்கு அவசியம். பொதுவாக அடைக்காப்பானினுள் மிதமான வெப்பநிலையே விரும்பப்படுகிறது. இது  99.5 டிகிரி செல்சியஸிலிருந்து 100.5 டிகிரி செல்சியஸ் ஃபாரன்ஹீட் (37.2 டிகிரி செ - 37.8 டிகிரி செ) வரை, குறைந்த வெப்பநிலை கரு வளர்ச்சியைக் குறைக்கும். வெப்பநிலை அதிகப்படும் பொழுது கோழிகளின் வளர்ச்சியை பாதிப்பு ஏற்பட்டு இறப்பு அதிகரிக்கிறது.

ஈரப்பதம் ஒரு முக்கியக் காரணி

உலர்ந்த அல்லது ஈரப்பதமுள்ள வெப்பநிலைமானிக் (thermometer) கொண்டு ஈரப்பதத்தை அளக்கலாம். முட்டைப் பொரிக்க 21 நாட்கள் ஆகும். முதல் 18 நாட்களில் ஈரப்பதம் 60 சதவீதமும் பின்பு 3 நாட்களுக்கு 70 சதவீதமும் இருந்தால் தான் முட்டைகள் குஞ்சுகள் பொரிக்கும். செலுத்தப்பட்ட அடைகாப்பானில் வெப்பநிலை அதிகரிக்கும் போது ஈரப்பதம் குறைந்து விடும்.

கருமுட்டைகளை அகலமான பக்கம் மேல்நோக்கியவாறு வைக்க வேண்டும். கூரிய முனைப்பகுதியை மேலே இருக்குமாறு வைத்தால், குஞ்சுகளின் தலைக் குறுகிய முனைப்பகுதியில் உருவாவதன் மூலம் பொரிக்கும் திறன் குறைந்து விடும். இதனால் முட்டையைத் திருப்பி விடுவது பொரிக்கும் திறனை அதிகப்படுத்தும்.

கைகளால் திருப்பினால் நாளொன்றுக்கு 4 முறை திருப்பவேண்டும். இப்போது நவீன அடைக்காப்பான்களில் முட்டைகள் தன்னிச்சையாகவே ஒரு நாளைக்கு 8 அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் திருப்பிக் கொள்கின்றன. இதில் முட்டைத்  தட்டுகள் 90 டிகிரி கோணத்தில் திருப்பிக் கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. 18 நாட்களுக்குப் பின் எந்த ஒரு திருப்புதலும் தேவைப்படாது.

வெவ்வேறு பொரிப்பான்கள்

முட்டைப் பொரிக்கும் திறனை அதிகப்படுத்த வெவ்வேறு பொரிப்பான்களைப் பயன்படுத்தலாம்.தனித்தனி பொரிப்பான்களைப் பயன்படுத்தும் போது 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், ஈரப்பதம் 70-80 சதவீதமும் பின்பற்றப்படுகிறது. இவ்வாறு தனித்தனியாகப் பயன்படுத்துவதன் மூலம் சுத்தப்படுத்துதல், கிருமி நீக்கம் மற்றும் பிற முட்டைகளைப் பாதிக்காமல் புகை போடுதல் போன்றவற்றைச் செய்வது எளிது.

அடைகாக்கப்பட்ட முட்டைகளைச் சோதித்தல்

5 அல்லது 7வது நாளிலிருந்து ஒளியில் கருவளர்நிலை காணவேண்டும். அப்போது கருவுறாத முட்டைகளையும், 18வது நாளில் சிதைந்த அல்லது இறந்த முட்டைகளையும் நீக்கிவிடலாம். ஆட்கூலியைக் குறைக்கப் பெரும்பாலும் 17 அல்லது 18ம் நாளில் தான் ஒளியில் கருவளர்நிலை காணப்படுகிறது. ஒளியை உட்செலுத்தும்போது அது முட்டையினுள் ஒளி ஊடுருவிச் செல்ல இயலாமல் இருட்டாக இருந்தால் கரு நன்றாக வளர்ந்துள்ளது என்றும் சிறிதளவு ஒளி கசியக்கூடியதாக இருந்தால் கரு இறந்து விட்டது என்றும் ஒளி எளிதில் ஊடுருவக்கூடியதாக இருந்தால் அது கருவுறாத முட்டை என்றும் அறிந்து கொள்ளலாம். கரு வளர்ந்துள்ள முட்டைகளை மட்டுமே பொரிப்பகத்திற்கு மாற்றம் செய்யவேண்டும். கோழியின் வம்சாவழியை பாதுகாக்க ஒரு கோழியின் முட்டைகளை ஆண் பெண் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்து அடுக்கி வைக்கவேண்டும்.

hatching of eggs

குஞ்சு பொரிப்பகத்தின் பராமரிப்பு

அடைகாப்பான் மற்றும் குஞ்சு பொரிப்பகத்தில் முட்டைகளை வைப்பதர்க்கு முன் ஒரு முறை கருவியை சோதனை செய்வது சால சிறந்தது. இதன் மூலம் குறை ஏதேனும் இருந்தால் முன்னெச்சரிக்கையாக சரி செய்து விடலாம். நன்கு கழுவி கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி வைக்கவேண்டும். இது நோய்ப் பரவலின் தன்மையைக் குறைக்கும்.

40 சதவீத கரைசலில் 40 மிலி ஃபார்மால்டிஹைடு, 20 கிராம் பொட்டாசியம் ஃபர்மாங்கனேட் கரைசல் ஒவ்வொரு 2.8 மீட்டர் முதல் 3 மீட்டர் இடைவெளிக்கும் அடைக்காப்பான் மற்றும் பொரிப்பகத்தினுள் ஊற்றவேண்டும். பொட்டாசியம் பர்மாங்கனேட்டை கண்ணாடி அல்லது மண்பாத்திரத்திலும், ஃபார்மலினை அதன் மீதும் ஊற்றிவிடலாம். புகையூட்டுதலை முட்டை வைப்பதற்கு முன் தினம் செய்து அறையைப் பூட்டிவிடவேண்டும். இது வெப்பநிலையை சரியாக நிர்வகிக்க உதவும்.

பொரிப்பகத்தில வேலை செய்பவர்கள் உள்ளே செல்லுமுன் குளித்து உடைகள், காலணிகளை மாற்றிக்கொண்டு செல்லவேண்டும். குஞ்சுகள் விற்பனை செய்யும் போது முறையாக இரசீது வழங்கி உடனுக்குடனே அனுப்பிவிடவேண்டும். மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் சமயங்களில் மின்சாரம் உண்டாக்கும் சாதனம் (ஜெனரேட்டர்) பயன்படுத்தலாம்.

k.Sakthipriya
Krishi Jagran 

English Summary: Poultry farming! Chicken artificial hatching of eggs, testing of incubated eggs and hatchery management

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.