1. Blogs

Google அறிமுகம் செய்த Imagen Video! கற்பனையை வீடியோவாக்க முடியுமா?

Deiva Bindhiya
Deiva Bindhiya
Imagen Video introduced by Google! Want to make a fantasy video?

உலகம் முழுவதும் AI எனும் தானியங்கி செயற்கை அறிவு கொண்டு பல புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் செய்கிறார்கள். அப்படி Meta நிறுவனம் உருவாக்கியது ‘Make a Video’ எனும் செயற்கை அறிவுத்திறன் கொண்ட மென்பொருளாகும்.

இதன் மூலம் நாம் எழுத்துபூர்வமாக சொல்வதை வீடியோவாக உருவாக்கி காண்பிக்கும், தெரியுமா? ஆம், இதேபோன்ற ஒரு மென்பொருள் தற்போது கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் ‘Imagen Video’ என்பதாகும்.

இந்த AI நாம் text மூலம் கூறுவதை விடியோவாக உருவாக்கும் திறன் கொண்டது. ஒருவாரத்திற்கு முன்பாக Meta நிறுவனம் அதன் Make a Video AI மென்பொருளை அறிமுகம் செய்தது. கூகுள் நிறுவனத்தின் Imagen Video AI மென்பொருள் 1280 x 768 Pixels Resolution கொண்ட வீடியோவை ஒரு நொடிக்கு 24Fp என்ற அளவில் 5.3 நொடிகளுக்கு காட்டும் திறனை கொண்டதாகும்.

முதலில் நாம் எழுதுவதை எடுத்துக்கொண்டு 16 frame, 3fps 24 x 48 Pixel Resolution கொண்டுள்ளது. பிறகு தானாகவே மேம்படுத்திக்கொண்டு 24fps கொண்ட 720P விடியோவை உருவாக்கும் திறன் இதற்கு உள்ளது.

மேலும் படிக்க: கோழி வளர்ப்பு மற்றும் ஆடு வளர்ப்புக்கு 50% மானியம்

இந்த ‘Imagen Video’ மென்பொருள் அதிக அளவு உலக அறிவு கொண்டது என்று கூகுள் தெரிவித்துள்ளது. இந்த Imagen Video வீடியோவை உருவாக்கும் திறன் கொண்டது மட்டுமல்லாமல் அதிகப்படியான உலக அறிவும் கொண்டுள்ளது என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை.

எவ்வளவு அறிவு என்றால் பலவகையான வீடியோ மற்றும் அனிமேஷன் போன்றவற்றை பல கோணங்களிலும், 3D முறையிலும் காட்டக்கூடிய வகையில், இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளே Internal Dataset ஒன்று உள்ளது. அதில் 1 மில்லியன் வீடியோ மற்றும் 60 மில்லியன் இமேஜ் மற்றும் கூடுதலாக 400 மில்லியன் LAION 400M open dataset இமேஜ் உள்ளது என்பதும் இதன் சிறப்பம்சங்களாகும்.

இந்த Imagen Video சார்ந்த குழு மற்றொரு கூகுள் நிறுவனத்தின் Text to Video AIசெயலியான Phenaki குழுவுடன் இணைந்து தெளிவான Text விவரங்களை 2 நிமிட விடியோவாக குறைந்த தரத்தில் உருவாக்க முடிவெடுத்துள்ளது.

அதில் சில வீடியோக்களை Demo முறையில் வெளியிட்டுள்ளது. உதாரணமாக ‘Coffee Pouring Into a Cup’, ‘Wooden Figurine Surfing on a Surfboard’, 'Balloon Full of Water Exploding in Extreme Slow Motion’ போன்ற AI வீடியோக்களை உருவாக்கமுடியும்.

மேலும் படிக்க: பனை நாற்றுகள் விற்பனை: பயன்பெற தோட்டக்கலை துறை அழைப்பு!

Facebook நிறுவனம் அதன் நிறுவன பெயரை META என்று மாற்றிக்கொண்டதில் இருந்த Metaverse, AI போன்ற பல துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மென்பொருள் போன்றவற்றை உருவாக்கி செயல்படுத்தியும் வருகிறது. அதற்கு போட்டியாகவே Google நிறுவனம் தற்போது இந்த Imagen Video AI மென்பொருளை உருவாகியுள்ளது என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க:

BECIL ஆட்சேர்ப்பு 2022 – 94 காலிப் பணியிடங்கள், ரூ.44,000 சம்பளம்

சதமடிக்க உள்ள சின்னவெங்காயம்! விலை என்ன?

English Summary: Imagen Video introduced by Google! Want to make a fantasy video? Published on: 11 October 2022, 04:18 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.