1. செய்திகள்

விவசாயிகள், தொழிலாளர்கள், நிறுவனங்களுக்கு அரிய வாய்ப்பு: பரிசு 1 லட்சம்

Deiva Bindhiya
Deiva Bindhiya
Rare Opportunity for Farmers, Workers, Enterprises: Prize 1 Lakh

நமது மாநில மரமான பனை மரத்தின் சாகுபடியை ஊக்குவித்து, பனை மரங்களை நம்பி வாழும் வேளாண் பெருமக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கு, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2021-22 ஆம் ஆண்டில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ்,

76 லட்சம் பனை விதைகளும், ஒரு லட்சம் பனங்கன்கன்றுகளும் முழு மானியத்தில் விநியோகம், பனைப் பொருட்களை மதிப்புக்கூட்டுவதற்கான நவீன இயந்திரங்கள் விநியோகம், அரசு நியாய விலைக் கடைகளில் பனை வெல்லம் விற்பனை, பனை மரங்களில் ஆராய்ச்சி என பல்வேறு பணிகளுக்காக அரசு நடவடிக்கை எடுத்தது.

இதன் தொடர்ச்சியாக, பனை மரம் ஏறும் பணியில் ஈடுப்பட்டுள்ள தொழிலாளர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில், இத்திட்டத்தின் சிறப்பம்சமாக, எவ்வித ஆபத்துமில்லாமல், எளிதாக பனை மரம் ஏறுவதற்கு சிறந்த கருவியினைக் கண்டுபிடிக்கும் நபருக்கு ஒரு லட்சம் ரூபாய் விருது வழங்கப்பட உள்ளது.

இந்தப் போட்டியில், பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள், முன்னோடி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொள்ளலாம். பனை மரம் ஏறுவதற்கு சிறந்த கருவியை கண்டுபிடிப்பவரைத் தேர்ந்தெடுப்பதற்காக, அரசு தேர்வுக்குழு ஒன்றினை அமைத்துள்ளது. இக்குழுவில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலிருந்து தோட்டக்கலைத்துறையின் பேராசிரியர், வேளாண் பொறியியல் துறையின் பேராசிரியர், தோட்டக்கலை கூடுதல் இயக்குநர் (மத்திய மற்றும் மாநில திட்டம்), தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி வாரியத்தின் அலுவலர் மற்றும் பனை சார்ந்த தொழிலில் சிறந்து விளங்கும் முன்னோடி விவசாயி ஆகியோர் உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள். இத்தகைய கருவியினைக் கண்டுபிடிப்பதற்கு ஆகும் மொத்த செலவினம், கருவியின் செயல்திறன், இதற்கான விலையின் உண்மைத்தன்மை, இயந்திரத்தின் ஒட்டுமொத்த பயன்பாட்டுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் விருதுக்கான நபர் தேர்வு செய்யப்பாடுவார்.

மேலும் படிக்க: பனை நாற்றுகள் விற்பனை: பயன்பெற தோட்டக்கலை துறை அழைப்பு!

இந்த விருதுக்கான போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனங்களும், தனிப்பட்ட நபர்களும் www.tnhorticulture.gov.in என்ற இணையத்தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பனை மரத்தொழிலாளர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசின் இத்தகைய நடவடிக்கையின் மூலம் பனைமரம் ஏறுவதற்கு எளிதான கருவி விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு, நமது மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க:

BECIL ஆட்சேர்ப்பு 2022 – 94 காலிப் பணியிடங்கள், ரூ.44,000 சம்பளம்

சதமடிக்க உள்ள சின்னவெங்காயம்! விலை என்ன?

English Summary: Rare Opportunity for Farmers, Workers, Enterprises: Prize 1 Lakh Published on: 11 October 2022, 02:30 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.