1. Blogs

மானியத்தில் 150 லட்சம் வரை கடன் - சிறப்பு தொழில் கடன் மேளா!

R. Balakrishnan
R. Balakrishnan
Special Business Loan Mela

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா இன்று முதல் 15 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், தொழில் முனைவோர்கள் பங்கு பெற்று பயனடைய தேனி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிறப்பு தொழில் கடன் மேளா  (Special Business Loan Fair)

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு மாநில நிதிக் கழகம் ஆகும். 1949 ம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இது வரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி (Loan) வழங்கி தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக இருந்து வருகிறது.

இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

திண்டுக்கல் கிளை அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழல்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா 08.12.2021 முதல் 15.12.2021 வரை நடைபெற உள்ளது.

மானியத்தில் கடன் (Loans in Subsidy)

இந்த சிறப்பு தொழில் கடன் மேளாவில் டி.ஐ.ஐ.சி. (TIC) யின பல்வேறு கடன் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம், 6% வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.150 இலட்சம் வரை வழங்கப்படும், இந்த முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50% சலுகை அளிக்கப்படும். NEEDS திட்டத்திற்கு ஆய்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.

முகவரி: (Address)

பிளாட் எண் 2, பாண்டியன் நகர் முதல் தெரு, காட்டாஸ்பத்திரி அருகில், திண்டுக்கல் 624 001.

மேலும், விபரங்களுக்கு

0451-2433785, 2428296 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு, இந்த அரிய வாய்ப்பினை தேனி மாவட்ட தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி தங்களது தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மானிய சேவைகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

பென்சன் வாங்குவோருக்கு வெளியானது சூப்பர் அறிவிப்பு!

வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம் அமைத்தால் 40% மானியம்!

English Summary: Loans up to Rs 150 lakh in subsidy - Special Business Loan Fair! Published on: 10 December 2021, 08:34 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.