1. Blogs

11 நாட்களுக்கு யாரும் சிரிக்கக்கூடாது- அரசு அதிரடி உத்தரவு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
No one should laugh for 11 days- Govt action order!

11  நாட்களுக்கு யாரும் சிரிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது என ஒரு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் இந்த உத்தவை மீறினால் உயிர்போய்விடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உங்கள் குடும்பத்தில் யாரோனும்  இறந்துவிட்டால்கூட சப்தம் போட்ட அழக்கூடாது என்பதும் அரசின்  எச்சரிக்கையாக உள்ளது.

வடகொரியா முன்னாள்  அதிபர், கிம் ஜாங் இல்-ன் 11வது நினைவு தினம் கடந்த 17ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது,

சர்வாதிகார சட்டங்கள் அமலில் உள்ள வடகொரியாவில் மக்கள் சிரிப்பதற்கும் மது அருந்துவதற்கும் தடை விதித்து அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். அவரது தந்தையும் வடகொரியாவின் முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கிம் ஜாங் இல்-ன் 11வது நினைவு தினம் கடந்த 17ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது.

 11 நாள் துக்கம்

 நினைவுதினத்தை முன்னிட்டு, 11 நாட்களுக்கு அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்றுப் பொருள்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

இறந்தால் கூட

அது மட்டுமல்ல, இந்த 11 நாள்களில், குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது, மெதுவாகவே அழவேண்டும். இந்த தடையை மீறுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிறந்த நாளுக்குத் தடை

ஒரு வேளை, இந்த 11 நாள்களுக்குள் யாரேனும் பிறந்திருந்தால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க தங்களது பிறந்தநாளைக் கூட கொண்டாட முடியாது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அழுகையும், சிரிப்பும்தான் மனித வாழ்வின் இரண்டு உணவுபூர்வமான தருணங்கள். தடைகளைக் கடந்த எல்லைகள்.  ஆனால் இவ்விரண்டும் இப்படியொருத் தடை  என்பது வியப்பின் உச்சம்தான்.

மேலும் படிக்க…

காய்கறி சாகுபடிக்கு ரூ.80,000 மானியம்- தொடர்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

மத்திய அரசு வழங்கும் ரூ.10,000-Check செய்வது எப்படி?

English Summary: No one should laugh for 11 days- Govt action order! Published on: 21 December 2022, 09:15 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.