1. Blogs

பெண்களுக்கு ரூ.50,000 வரை நிதி -பெறுவதற்கான வழிகள் என்ன?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
What are the ways for women to get funding up to Rs 50,000?

தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்படும் கிராமப்புறப் பெண்களுக்கான திருமண உதவித்திட்டங்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சமூக நலத்துறையின் சார்பிலான கிராமப்புற பெண்களுக்கான திருமண உதவி திட்டங்கள் 5 வகையான திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இப்படிப்  பலத் திட்டங்கள் இருந்தும்கூட மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையே உள்ளது.

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவி திட்டம்

  • 1985ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு ஆண்டு வருமான உச்ச வரம்பு இல்லை.

  • மணப்பெண் 18வயது நிரம்பிய வராக இருக்க வேண்டும்.

  • பட்டதாரிகளுக்கு ரூ.50,000மும், மற்ற படித்த பெண்களுக்கு ரூ.25,000மும்

    காசோலையாக வழங்கப்படுகின்றன.

  • அத்துடன் 8கிராம் தங்கம் தாலி செய்ய இலவசமாக வழங்கப்படுகின்றன.

  • திருமணத்திற்கு 40நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.

முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண திட்டம்

  • 1967 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது இந்தத் திட்டம்.

  • சாதி மறுப்புக் கலப்பு திருமண செய்துள்ள தம்பதிகளில் ஒருவர் கண்டிப்பாக பட்டிலின மற்றும் பழங்குடியின வகுப்பினர் ராக இருக்க வேண்டும்.

  • மற்றவர் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ராக இருக்க வேண்டும்.

  • இதில் பட்டதாரியாக இருந்தால் ரூ.30,,000 காசோலையும் ரூ. 20,000 ரூபாய்க்கான சேமிப்பு பத்திரமும், வழங்கப்படும்.

  • மற்ற வர்களுக்கு ரூ.15,000 யும், ரூ.10,000 சேமிப்பு பத்திரமாக வழங்கப்படும்.

  • திருமண செய்த நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள்

விண்ணப்பிக்கலாம்.

ஈ. வே. ரா. மணியம்மை நினைவு திருமண திட்டம்.

  • கடந்த1981 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது இத்திட்டம்.

  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 த்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  • மணப்பெண்ணின் வயது18,பூர்த்தி யாக உள்ள நிலையி்ல் விண்ணப்பிக்க முடியும்.

  • பட்டதாரியாக உள்ள பெண்களுக்கு ரூ.50,000 மும், மற்றவர்களுக்கு

    ரூ.25,000மும் வழங்கப்படுகின்றன.

  • நாற்பது நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்கலாம்.


மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம்

  • இது 1989ஆம் ஆண்டில் இருந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  • பட்டதாரி மற்றும் பட்டயக்கல்வி படித்தவர்களுக்கு ரூ.50,000யும் பத்தாவதுவரை படித்தவர்களுக்கு ரூ.25000யும் காசோலையாக வழங்கப் படுகிறது.

  • மலை வாழ் பழங்குடியினர் ஐந்தாவது படித்து இருந்தால்கூட விண்ணப்பிக்கலாம்.

  • ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இந்த திட்டத்தில் பயனாளிகளாக இருக்க முடியும்.

  • நாற்பது நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.

 டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை திருமண உதவி திட்டம்

  • 1975ம் ஆண்டு முதல் இந்த விதவை திருமண திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

  • மணமகளுக்கு வயது குறைந்த பட்சமாக 20 ஆக இருக்க வேண்டும்.

  • மணமகனுக்கு 40வயது மிகாமல் இருக்க வேண்டும்.

  • கணவன் இறந்த சான்று மட்டும் மறுமண பத்திரிகை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

  • பட்டதாரியாக இருந்தால் ரூ.30,000மும், ரூ.20,000 சேமிப்பு பத்திரமாக வழங்கப்படுகிறது. 8கிராம் தங்கமும் இலவசமாக வழங்க படுகின்றன.

  • 6மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க லாம்.

  • மேற்கண்ட திட்டங்களை தெரிந்து கொண்டு பயன்படுத்தப் பெண்கள் முன்வரவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

சந்தேகம் இருந்தால், அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

தகவல்
அக்ரி. சு.சந்திரசேகரன்
வேளாண் ஊராட்சிமன்றம்
அருப்புக்கோட்டை
9443570289

மேலும் படிக்க...

பட்டாசு வடிவில் சாக்லேட்டுகள்- தீபாவளியையொட்டி விற்பனை!

10 பைசாவுக்குப் பிரியாணி- அலைமோதிய அசைவ பிரியர்கள்!

English Summary: What are the ways for women to get funding up to Rs 50,000? Published on: 19 October 2021, 09:44 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.