1. Blogs

WhatsApp-ல் இனி கேஸ் பதிவு செய்யலாம், பாரத் பெட்ரோலியம் அறிமுகம்!

Daisy Rose Mary
Daisy Rose Mary

கேஸ் பதிவை Whatsapp மூலம் செய்யும் வசதியை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (Bharat Petroleum Corporation Limited) அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கேஸ் பதிவு வசதி எளிமையாக்கப்பட்டுள்ளது.

முன்பு, எல்.பி.ஜி (LPG) சிலிண்டர்களை பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் அந்தந்த கேஸ் அலுவலகங்ளுக்கு சென்று பதிவு செய்து வந்தனர். பின் நிலை மாறி தொலைபேசி வாயிலாக பதிவு செய்யத்தொடங்கினர். தற்போதைய காலக்கட்டதில் அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டுள்ளது, அனைத்து சேவைகளும் இணையம் வாயிலாக நடைபெறத் தொடங்கிவிட்டன.

இந்நிலையில், பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு எளிமையான முறையில் கேஸ் சிலிண்டர்களை பதிவு செய்ய ஏதுவாக WhatsApp வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது. இதன் மூலம் பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், மூலம் தங்களில் கேஸ் சிலிண்டர்களை எளிமையாக பதிவு செய்துகொள்ள முடியும்.

WhatsApp-ல் பதிவு செய்யும் முறை

  • உங்கள் WhatsApp மூலமாக நீங்கள் பாரத் கேஸ் சிலிண்டரை பதிவு செய்ய முதலில் 1800224344 என்ற நம்பரை உங்கள் மொபைலில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

  • பின் இந்த எண்ணிற்கு உங்கள் பதிவு செய்யப்பட்ட Whatsapp எண்ணில் இருந்து, Hi என்று ஆங்கிலத்தில் மெசேஜ் அனுப்பவும்.

  • இதை தொடர்ந்து, பாரத் பெட்ரோலிய நிறுவனத்திடம் இருந்து உங்கள் எண்ணிற்கு எண் "1அழுத்தவும்" அல்லது "புக் செய்யவும்" என்று தகவல் வரும். இதில் நீங்கள் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்

  • நீங்கள் இதனை செய்தவுடன் உங்களுக்கான கேஸ் சிலிண்டர் பதிவு செய்யப்பட்டுவிடும்.

Whats app முறையை தவிர IVRS மூலமாகவும் கேஸ் சிலிண்டர்களை பதிவு செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... 

PM-Kisan: 8.5 கோடி விவசாயிகளுக்கு 6-வது தவணையை விடுவித்தார் பிரதமர் மோடி!!

விவசாயிகள் கடன் பெற உதவும் கிசான் கிரெடிட் கார்டு! - விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசின் மானியத் தகவல்கள் அனைத்தும் உங்கள் கைகளுக்குக் கொண்டு வரும் "PM Kisan Mobile App"!!

English Summary: You can Now Book Your Bharat Petroleum LPG Cylinder Via WhatsApp Published on: 08 June 2020, 07:21 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.