1. Blogs

தனது வீட்டில் கீரை தோட்டம் அமைத்த சமந்தா!- டிப்ஸ் இலவசம்!

Daisy Rose Mary
Daisy Rose Mary

கொரோனா ஊரடங்கு காலத்தில் பிரபலங்கள் சிலர் தங்களுக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வரும் வகையில் புது புது முயற்சிளை செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் பிரபல நடிகை சமந்தாவும் இனணந்துள்ளார்.

அண்மையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது வீட்டில் இருந்தபடியே, முட்டைக்கோஸ் மைக்ரோகிரீன்களை (Cabbage microgreens) வளர்தது அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், அதனை எவ்வாறு வளர்த்து பராமரிப்பது என்ற டிப்ஸையும் கொடுத்துள்ளார்.

தேவையான பொருட்கள்

ஒரு தட்டு (Plate )

கோகோபீட் (Coco peat)

விதைகள் (seeds) மற்றும் குளிர்ச்சியான அறை (Cool room)

அவர் தனது படுக்கையறையைப் பயன்படுத்தியுள்ளார், அந்த அறையில் இருந்த ஜன்னல் மூலம் ஓரளவுக்கு சூரியஒளி வந்ததாக குறிப்பிட்டுள்ளார். தட்டில் அதிக சூரிய ஒளி கிடைக்காவிட்டால், அதன் அருகே ஒரு படுக்கை விளக்கு வைக்கலாம் என்று கூறியுள்ளார்

Read more 
வீட்டு செடிகளுக்கு இயற்கை பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பு முறை!!

Lockdown : வீட்டில் இருப்பவர்களா நீங்கள்? அப்போ இந்த தகவல் உங்களுக்கு தான்!

விளைவிக்கும் முறை 

  • Step 1: முதலில் கோகோபீட்டை தட்டில் நிரப்ப வேண்டும்

  • Step2: பின் விதைகளை தெளிக்கவும்

  • Step 3: கோகோபீட் முற்றிலும் ஈரப்பதமாகும் வரை, தாராளமாக தண்ணீரை தெளித்து தட்டில் மூடி வைக்கவும்.

    குறிப்பு: உங்கள் வீட்டின் மிகச்சிறந்த பகுதியில், ஜன்னலுக்கு அருகில் தட்டை வைக்வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • Step4: 4 நாட்களுக்கு அதை அப்படியே விடுங்கள். (பின்னர், பார்க்கும் பொழுது சிறிய  கீரைகள் வளர்ந்து இருப்பதை பார்க்கலாம்)

  • Step5: 5 வது நாளில் இருந்து தினமும் ஒரு முறை தாராளமாக தண்ணீரை தெளிக்க வேண்டும்.

  • Step6: 8-ம் நாளில் இருந்து 14-ம் நாள் வரை, உங்கள் கீரைகளை எப்போது வேண்டுமானாலும் அறுவடை செய்யலாம் என ரசிகர்களுக்கு டிப்ஸும் கொடுத்திருக்கிறார் சமந்தா.

English Summary: Actress Samanthas lockdown tips on how to harvest cabbage microgreens on her instagram Published on: 13 June 2020, 04:08 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.