1. விவசாய தகவல்கள்

100% மானியத்தில் ஆழ்துளை கிணறு: விவசாயிகளுக்கு அழைப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
100% Subsidy Bore Well

தமிழகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து தரும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன் பெறுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆழ்துளை கிணறு (Bore well)

தமிழகத்தில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி அதன் மூலம் விளைச்சலை அதிகப்படுத்தும் நோக்கில் ஆதிதிராவிடர் பழங்குடியின விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த 2021 – 2022 ஆம் நிதியாண்டில் ரூ. 12 கோடி செலவில் மின் மோட்டாருடன்‌ நுண்ணீர்ப்‌ பாசன வசதி அமைத்து தரப்படும் என்று வேளாண் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

வேளாண்மை பொறியியல் துறை மூலம் இத்திட்டத்தினை செயல்படுத்திட அரசு ஆணை பிறப்பித்தது. தமிழக அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தின் கீழ் மாவட்ட விவசாயிகள் பயன்பெறுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசின் நுண்ணீர் பாசன வசதி திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க: சென்னை: TAMCO மூலம் சிறுபான்மையினருக்கு ரூ.20,000 லட்சம் கடன் உதவி

மேலும் 90030 90440 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஆழத்திற்கும் அதிகமாக கிணறு அமைக்க வேண்டும் என்றாலோ அல்லது கூடுதல் குதிரைத்திறன் கொண்ட பம்புசெட்களை நிறுவ வேண்டும் என்று திட்டமிட்டாலோ அதற்கு ஆகும் கூடுதல் செலவை அந்த விவசாயிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஆட்சியர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க

மீன் வளர்ப்புக்கு ரூ.30,000 மானியம்: உடனே விண்ணப்பிக்கவும்!

வேலையை விட்டுப் போனதும், PF கணக்கில் இந்த தவறை செய்யாதிங்கள்: நஷ்டம் உங்களுக்கு தான்!

English Summary: 100% Subsidy Bore Well: Farmers Call! Published on: 04 February 2023, 09:29 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.