1. விவசாய தகவல்கள்

கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
7 districts including Coimbatore may receive heavy rains - Meteorological Department

Credit : Indian Express

வளிமண்டல சுழற்சி காரணமாக, கோவை, தேனி உட்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழையால் மகிழ்ச்சி (Delighted by the rain)

தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக ஓரிரு இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்த மழை விவசாயப் பணிகளுக்குப் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

கனமழை (Heavy rain)

அதன்படி, காற்றின் திசைவேக மாறுபாடு மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மிதமான மழை (Moderate rain)

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

6.07.21 முதல் 7.07.21 (6.07.21 to 7.07.21)

இதேபோல், நாளையும், நாளை மறுதினமும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனியில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை (Chennai)

  • சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

  • நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

  • அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் சில பகுதிகளில் இலேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வெப்பநிலை (Temperature)

அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

மழைபதிவு (Rainfall)

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மனப்பூண்டியில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்காக எச்சரிக்கை (Warning for fishermen)

  • வரும் 8ம்தேதி வரை தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

  • எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

கொரோனாவை கட்டுப்படுத்த செப்டம்பர் மாதத்திற்குள் 10% மக்களுக்கு தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு!

2020 ஆம் ஆண்டில் 4-இல் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை: யுனிசெப் தகவல்

English Summary: 7 districts including Coimbatore may receive heavy rains - Meteorological Department

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.