1. விவசாய தகவல்கள்

வேளாண்‌ அடுக்ககம்‌ திட்டம்‌ GRAINS வலைதளத்தில்‌ பதிவுசெய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

Deiva Bindhiya
Deiva Bindhiya
வேளாண்‌ அடுக்ககம்‌ திட்டம்‌ GRAINS வலைதளத்தில்‌ பதிவுசெய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
Agri Stack Program invites Tamil Nadu farmers to register on the GRAINS website

Tamil Nadu வேளாண்‌ அடுக்ககம்‌ (Agri Stack) திட்டமானது ஏப்ரல் 01, 2023 முதல்‌ செயல்படுத்தப்படவுள்ளது. வேளாண்‌ அடுக்ககம்‌ உருவாக்குவதன்‌ மூலம்‌ நில விவரங்களுடன்‌ இணைக்கப்பட்ட விவசாயிகள்‌ விபரம்‌, நில உடைமை வாரியாக புவியியல்‌ குறியீடு செய்தல்‌ மற்றும்‌ நில உடைமை வாரியாக சாகுபடி பயிர் விவரம் ஆகிய அடிப்படை விவரங்களை கொண்டு GRAINS (Grower Online Registration Of Agricultural Input System) என்ற வலைதளம் உருவாக்கப்படவுள்ளது.

Grains வலைதளத்தில்‌ விவசாயிகள்‌ பயனடையும்‌ வகையில்‌ பேரிடர்‌ மேலாண்மைத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டுவளர்ச்சித்துறை, உணவு வழங்கல்‌ துறை, வேளாண்‌ பொறியியல்‌ துறை, ஊரகவளர்ச்சித்துறை, கால்நடைபராமரிப்புத்‌ துறை, வேளாண்‌ விற்பனை மற்றும்‌ வேளாண்‌ வணிகத்‌ துறை, விதை சான்றளிப்புத்துறை, வருவாய்த்துறை மற்றும்‌ சர்க்கரைத்துறை ஆகிய துறைகள்‌ இணைக்கப்படவுள்ளது.

GRAINS வலைதளத்தின்‌ நன்மைகள்‌:

அரசின்‌ நலத்திட்டங்கள்‌ சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதிப்படுத்திட முடியும்‌. ஒற்றைசாளர (Single Window Portal) வலைதளமாக செயல்படுவதால்‌ விவசாயிகளுக்கு அனைத்து பயன்களும்,‌ ஒரே இடத்தில்‌ பதிவுசெய்து அரசின்‌ உதவிகளை பெற்றுக்‌ கொள்ளலாம்‌. ஒவ்வொரு முறையும்‌ பயன் பெற விவசாயிகள்‌ விண்ணப்பிக்கும்‌ போது ஆவணங்கள்‌ சமர்ப்பிக்க வேண்டியதில்லை. விவசாயிகள்‌ இதுவரை அரசிடமிருந்து பெற்ற நன்மைகளை தெரிந்துகொள்ளலாம்‌. விவசாயிகள்‌ நேரடியாக வலைதளத்தில்‌ பதிவு செய்வதால்‌ முன்னுரிமை அடிப்படையில்‌ அரசின்‌ பயன்களை பெற்றுக்கொள்ளலாம்‌.

வேளாண்மை சார்ந்த அனைத்து துறைகளும்‌ விவசாயிகளின்‌ அடிப்படை விவரங்கள்‌ மற்றும்‌ பயிர்‌ விவரங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப பயன்களை அளிக்கமுடியும்‌. திட்ட நிதி பலன்களை ஆதார்‌ எண்‌ அடிப்படையில்‌ வங்கி கணக்கிற்கு நேரடி பணபரிமாற்றம்‌ மூலம்‌ அனுப்பப்படும்‌ போன்ற நன்மைகளை, இவ்வலைதளத்தின்‌ மூலம்‌ பெறலாம்‌.

மேலும் படிக்க:

தர்மபுரியில் இ-சேவை மையங்களைத் திறந்து நடத்த விண்ணப்பங்கள் வரவேற்பு

ஏப்ரல் 5ஆம் தேதி நெல்லையில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் தகவல்

விவசாயியின்‌ விவரங்களை Grains வலைதளத்தில்‌ பதிவுசெய்ய தேவைப்படும்‌ ஆவணங்கள்‌

  • விவசாயியின்‌ ஆதார்‌ அட்டை நகல்‌ (Aadhar Card Copy)
  • விவசாயியின்‌ புகைப்படம்‌ (Passport Size Photo)
  • வங்கிகணக்கு புத்தக நகல்‌ (Bank Passbook Copy)
  • நிலபட்டா ஆவண நகல்‌ (Land Document Copy)

எனவே, அனைத்து விவசாயிகளும்‌ மேற்கண்ட ஆவணங்களை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்‌, உதவி வேளாண்மை அலுவலர் ‌/ உதவி தோட்டக்கலை அலுவலரிடம்‌ உடனடியாக ஒப்படைத்து Grains வலைதளத்தில்‌ தங்களின்‌ அடிப்படை விபரங்கள்‌ பதிவு செய்யப்பட்டதை உறுதிசெய்து அரசின்‌ நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது‌.

மேலும் படிக்க:

வேலை வேண்டி ஸ்டெர்லைட் காப்பர் மீண்டும் திறக்கக் கோரி போராட்டம்

TN வேளாண் பட்ஜெட் 2023 தமிழக இளைஞர்களுக்கு அளித்த குட் நியூஸ்! என்ன தெரியுமா?

English Summary: Agri Stack Program invites Tamil Nadu farmers to register on the GRAINS website Published on: 24 March 2023, 12:32 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.