1. விவசாய தகவல்கள்

PM-kisan விதிகளில் மாற்றம் - மாவட்ட ஆட்சியர் தகவல்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Change in PM-kisan rules - District Collector Info!

PM-kisan திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 11 -வது தணையைப் பெறுவதற்கு, விவசாயிகள் இந்த வேலையை உடனே முடிக்க வேண்டும். ரூ.6000 ரூபாய் உங்களுக்குக் கிடைக்க வேண்டுமானால், வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், ஆதார் இணைப்பை உடனே செய்யுமாறு கடலூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நிலம் இருக்கும் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது. வேளாண் இடுபொருட்கள் வாங்க மற்றும் இதர வேளாண் பணிகளுக்குப் பயன்படுத்திக்கொள்வதற்காக இந்த நிதி, ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கடலூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் 1,82,811 விவசாயிகள் இதுவரையிலும் பயன் அடைந்து வருகின்றனர். அதே சமயம் விவசாயிகள் வரும் ஏப்ரல் 2022 முதல் ஜூலை 2022 வரை காலத்திற்கான 11வது தவணை தொகையை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பது கட்டாயம் ஆகும்.

மத்திய அரசு தற்போது பி.எம் கிசான் திட்ட நிதி விடுவிப்பில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதுவரை விவசாயிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக நிதி விடுவிப்பு செய்து வந்த நிலையில் இனி திட்ட நிதியானது ஆதார் எண் அடிப்படையில் விடுவிக்கப்பட இருக்கிறது.

தற்போது விவசாயிகள் 11வது தவணை தொகை (01.04.2022 முதல் 31.07.2022 வரை) பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி எண்ணோடு இணைப்பது கட்டாயம் ஆகும். எனவே விவசாயிகள் உடனடியாக தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளைக்கு ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் சென்று வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை உடனே இணைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

ரேஷன் அட்டை தாரர்களுக்கு ஜாக்பாட்- இலவச ரேஷன் திட்டம் 6 மாதம் நீட்டிப்பு!

நிலத்தடி நீர் குறையும் அபாயம்- விவசாயிகள் கவனத்திற்கு!

English Summary: Change in PM-kisan rules - District Collector Info! Published on: 28 March 2022, 11:30 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.