1. விவசாய தகவல்கள்

பொன் விளையும் பூமியின் மகத்துவம்! - மண்ணின் தன்மையை விளக்கும் ''மண்வள அட்டை'' திட்டம்

Daisy Rose Mary
Daisy Rose Mary

''மண்'' பஞ்ச பூதங்களில் ஒன்று. நம் இயற்கை வழங்கிய கொடைகளில் மிக முக்கியமானது மண். அதன் தன்மை, பாசன நீர், பயிர் மற்றும் பிற உயிரியல் பண்புகளின் அடிப்படையில் மண்ணின் வளத்தையும் தரத்தையும் நிர்ணயிப்பது தான் இந்த ''மண்வள அட்டை''.

மண் வள அட்டையின் நோக்கம் ( Motive of Soil health card) 

மண்வளத்தைக் கண்காணிக்கவும், மேம்படுத்தவும் இந்த மண்வள அட்டை ஒரு கருவியாகப் பயன்படுகிறது. காலப்போக்கில் மண்வளத்தில் ஏற்படும் மாற்றங்களையும் அதற்கான மேம்பாட்டு முறைகளையும் இந்த அட்டையில் பதிவு செய்து கொள்ளலாம். ஒரே நபர் இந்த அட்டையை தொடர்ந்து பூர்த்தி செய்து வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு மண் எந்த அளவுக்கு பயிர் உற்பத்தித் திறன் கொண்டது என்பதை இந்த அட்டையைக் கொண்டு அறிய முடியும்.

மண் பரிசோதனையின் அவசியம் (Importance of soil Test)

பயிர் சாகுபடியில் உயர் விளைச்சல் பெற்றிட தழைச்சத்து, சாம்பல்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளிட்ட 20 வகையான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றது. இந்த சத்துக்கள் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நல்ல மகசூல் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.

ஒரு பயிருக்கான உரத்தேவையை கணக்கிடுவதற்கு மண்ணில் உள்ள சத்துக்களின் அளவு விவரம் அறிந்திட மண் பரிசோதனை செய்வது மிகமிக அவசியமாகும். மண் பரிசோதனை செய்வதன் மூலம் நிலத்தில் உள்ள சத்துக்களின் அளவு அறிந்து உரமிட உதவுகிறது.

Image credit : Istock

மண் வள அட்டைத் திட்டம் (Soil health Card)

அத்தகைய மண்வளத்தை அறிந்து அதற்கு தகுந்தபடி விவசாயம் செய்து உற்பத்தியை பெருக்குவதற்காக தான் கடந்த 2015-ஆம் ஆண்டு மத்திய அரசால் மண் வள அட்டை (Soil health Card) திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

மண் பரிசோதனை செய்யப்படுவதன் மூலம் விவசாயிகள் தங்களுடைய விளைநிலத்தின் மண் வளம், தன்மைகள் மற்றும் அதன் இயல்புகளைப் புரிந்துகொள்ள முடியும். எந்த வகையான தானியங்களைப் பயிர் செய்ய வேண்டும், என்ன வகையான உரமும், ஊட்டச் சத்தும் மண்ணுக்குத் தேவைப்படுகிறது போன்ற நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.
இந்த திட்டத்தின் மூலம் மண் வளம் ஆண்டுக்கு இரண்டு முறை பரிசோதனை செய்து மண் வள அட்டையில் குறிக்கப்படும்.

மண்வள அட்டையை உபயோகிப்பது எப்படி?

  • மண்வகைகள், வயலின் சரிவு, பயிர் சுழற்சி, உர மேம்பாடு ஆகியவற்றை பொறுத்து ஒரு பண்ணையில் உள்ள நிலங்களை தனித்தனியே பிரித்து ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு அட்டையைப் பயன்படுத்த வேண்டும்.

  • ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு அல்லது மூன்று பொருத்தமான இடங்களை தேர்வு செய்து மண்ணின் பண்புகளை ஆய்வு செய்ய வேண்டும்.

  • மண் பரிசோதனையின் அடிப்படையில் மண்ணின் தரத்தினை வளமானது, சுமாரான வளம், வளம் குன்றியது என்று தரம் பிரித்து அதற்கான கட்டத்தில் குறிக்கப்படும்.

  • மண்ணில் வேறு ஏதாவது குறைபாடுகள் இருப்பின் அவைகளும் மண் வள குறிப்புப் பகுதியில் விபரமாக எழுதப்படும்.



PM Kisan திட்டத்தில் இப்போது அதிக விவசாயிகள் பயன் பெறலாம்!

கேன்சர் கில்லர் என்று சொல்லப்படும் முள் சீத்தா பழம்! அதன் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு!

காளான்களை பதப்படுத்தும் மற்றும் விற்பனை முறைகள்!

English Summary: Here are the things to know about Soil health card and its uses Published on: 07 July 2020, 07:18 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.