Krishi Jagran Tamil
Menu Close Menu

தேசிய ஓய்வூதிய திட்டம் தெரியுமா உங்களுக்கு? உங்களின் எதிர்காலத்தை அழகாக்கலாம் வாருங்கள்!

Tuesday, 28 July 2020 05:48 PM , by: Daisy Rose Mary
National pension scheme

இன்றைய சேமிப்பு நாளைய வாழ்க்கைக்கு வழிகாட்டும். உங்களின் அன்பானவர்களின் பெயரில் இந்த திட்டத்தில் மாதம் சிறு தொகையினை முதலீடு செய்வதன் மூலம், 60 வயதுக்கு பிறகு மாத வருமனம் கிடைக்க வழிவகை செய்கிறது. இந்த திட்டம் குறித்து விரிவாக தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்

தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme - NPS)

கடந்த 2004 ஆம் ஆண்டு அரசு உழியர்களுக்காக தேசிய ஓய்வூதியத் திட்டத்திம் (National Pension scheme) தொடங்கப்பட்டது. பின் கடந்த 2009ம் தனியார் உழியர்கள், சுய தொழில் செய்பவர்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் பயன்பெரும் வகையில் இந்த திட்டத்தை மத்திய அரசு விரிவுபடுத்தியது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.வயது முதிர்ந்த காலத்தில் பொருளாதார பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்யவும், மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

விவசாயிகளே டிராக்டர் வாங்க விருப்பமா? எளிய முறையில் கடன் அளிக்கிறது SBI வங்கி!

யாரெல்லாம் பயன்பெறலாம்? (Who can benefit NPS Scheme)

 • மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனி நபர்கள், ஏழைஎளியோர் என்று அனைவரும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

 • வெளிநாட்டுகளில் வாழும் இந்தியர்களும் (NRI) இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 • 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைவரும் இந்த திட்டத்தில் சேரலாம்.

How to get benefit on national pension scheme

Image credit: Study IQ education

இரண்டு வகை கணக்குகள் விவரம்

படி-1 - TIER-1

இதில் சேரும் தொகையை சந்தாதாரர், கணக்கு முடிவுறும் வரை அல்லது ஓய்வு பெறும் வரை திரும்பப் பெறமுடியாது. தேசிய ஓய்வூதிய திட்ட விதி முறைகளுக்கு உட்பட்டு வெளியேறும் போது மட்டுமே இக்கணக்கை முடித்து பணத்தை திரும்பப் பெற முடியும். இக்கணக்கில் சேர்ந்துள்ள சந்தாதாரர்கள் ஒரு நிதியாண்டில் குறைந்தது 6000/- ரூபாய் செலுத்த வேண்டும். இல்லையென்றால் இந்த ஓய்வூதியக் கணக்கு முடக்கப்படும்.

படி - 2 - TIER-2

இதில் சேரும் தொகை சந்தாதாரரின் தன்விருப்ப சேமிப்பு என்பதால், இந்த கணக்கிலிருந்து சந்தாதாரர் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் இத்திட்டத்தில் செலுத்திய தொகையை திரும்பப் பெறலாம். இந்தக் கணக்கினை முதல் வகையான கணக்கிற்கான கூடுதல் இணைப்புக் கணக்காகவும் எடுத்துக் கொள்ளலாம். சந்தாதாரர்கள் படி -1 ல் ஓய்வூதியக் கணக்குத் தொடங்கியிருந்தால் மட்டுமே படி - 2ல் கணக்கு தொடங்க முடியும். இவ்வகையான கணக்கில் ஒரு நிதி ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2000/- ரூபாய் பங்களிப்பாகச் செலுத்த வேண்டும்.

Jan Dhan Yojana: ஜன் தன் திட்டம் குறித்து அறிந்து கொள்ள மாநில அளவிலான இலவச உதவி என்கள்!

இந்த திட்டத்தில் இணைந்தவுடன் தங்களுக்கு ஒரு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (Permanent Retirement Account Number) ஒன்று வழங்கப்படும் . அதனை ஓய்வூதிய கணக்கு எண் என்று சொல்வார்கள். இந்த 12 digit நம்பர் தான் தாங்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான அடையாள (Identification) எண். 

தேவைப்படும் ஆவணங்கள் (Documents Required)

 • முகவரிச் சான்று

 • அடையாளச் சான்றிதழ்

 • பிறந்த தேதிக்கான சான்றிதழ்

 • சந்தாதார் பதிவுப் படிவம்

கணக்கு துவங்குவது எப்படி?

அஞ்சல் துறை, பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட 58 நிறுவனங்களில், இந்த திட்டத்துக்கான கணக்கு ஆரம்பிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. வங்கி குறித்த விவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யுங்கள் https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html முதலீட்டாளர்கள் இந்த National Pension Scheme திட்டத்தில் ரூபாய் 1,50,000/- வரை முதலீடு செய்யும்போது 80 C-கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில் தொடங்க விருப்பமா? ரூ.10 லட்சம் வரை கடன் தரும் முத்ரா திட்டம்!

NPS National pension scheme தேசிய ஓய்வூதியத் திட்டம் ஓய்வூதியத் திட்டம் ஓய்வூதியத் காப்பீடு old age pension Governemt pension scheme மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டம்
English Summary: Do you know the National Pension Scheme? Get Benefit to beautify your Old age

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Monsoon 2020 update on Krishi Jagran Tamil Help App

Latest Stories

 1. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பஞ்சகவ்யா விற்பனைக்கு! விவசாயிகள் கவனத்திற்கு!
 2. தரமான காய்கறி விதைகள் உற்பத்திக்கு மானியம் - தோட்டக்கலைத் துறை!!
 3. PMFBY: நெல்லுக்குப் பயிர் காப்பீடு செய்ய ஆகஸ்ட் 16ம் தேதி கடைசிநாள் - வேளாண்துறை அறிவுறுத்தல்!
 4. SSY:மாதம் 3000 முதலீட்டில் 17 லட்சம் ஈட்டும் மத்திய அரசின் திட்டம்! தெரியுமா உங்களுக்கு!
 5. ''வேளாண் வல்லுநர் அமைப்பு'' வழங்கும் - பயிர்களுக்கான ''ஆப்'' தொகுப்பு!!
 6. இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்வோர் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அழைப்பு!
 7. பசுந்தீவன விதைகளுக்கு முழு மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கால்நடை துறை
 8. கொட்டித் தீர்க்கும் பருவமழையால், கிடுகிடுவென நிரம்பும் அணைகள்- கரையோர மக்களுக்கு காத்திருக்கிறது அபாயம்!
 9. UYEGP : 5% முதலீடு செய்தால் போதும்! அரசின் 25 % மானியத்துடன் நீங்களும் முதலாளி ஆகலாம்!
 10. விலங்குகளைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் எடுப்பதில் அரசு உறுதி - பிரகாஷ் ஜவடேகர்

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.