Krishi Jagran Tamil
Menu Close Menu

விதைப்புக்கு முன்பு விதை நேர்த்தி: செய்முறை மற்றும் பலன்கள்

Thursday, 15 November 2018 05:19 PM
Seed treatment MIxing

விதைகள் நன்கு முளைப்பு பெற்று, பயிர்கள் நன்கு வீரியத்துடன் வளர விவசாயிகள் பல்வேறு வழிமுறைகளை பின் பற்றுகின்றனர். பூச்சி கொல்லிகள், பயிர் ஊக்கிகள், பயிர் தெளிப்பான்கள் போன்ற பல்வேறு ஊக்கிகளை பயன் படுத்தி பயிர் வளர்ந்து அதிக மகசூல் பெற இம்முறைகளை கையாளுகின்றனர். என்னதான் இவைகள் பின் பற்றப்பட்டாலும் விதைப்புக்கு முன் விதை நேர்த்தி என்பது மிக அவசியமாகும். விதை நேர்தியால் விதைகள் நன்கு சத்துக்கள் பெற்று விதைத்த பின் பயிர்களை வீரியத்துடன் வளரச்சி செய்வதில் முக்கியத்துவம் வகிக்கிறது.

விதை நேர்த்தி செய்வதால் ஏற்படும் பலன்கள்

விதை மற்றும் மண் மூலம் பரவும் நோய்க்கிருமிகள் மற்றும் பூச்சிகளிலிருந்து முளைக்கும் விதை மற்றும் விதை நாற்றுகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது.

விதை முளைப்புத் தன்மையை அதிகப்படுத்துகின்றது.

குறித்த காலத்திற்கு முன், சீரான நிலை மற்றும் வேக வளர்ச்சியை அடைய உதவுகிறது.

பயிறு வகைகளில், வேர் முடிச்சுகள் உருவாகுவதை அதிகப்படுத்துகின்றது.

சத்துக்களை மண் மற்றும் இலை வழிகளில் செலுத்துவதைவிட, இம்முறை சிறந்தது.

குறைந்த/ அதிக ஈரத்தன்மை போன்ற எதிர்மறையான சுழ்நிலைகளிலும் சீரான பயிர் வளர்ச்சியை தருகிறது.

seed Treatment

விதை நேர்த்திக்கான செயல்முறை

விதை நேர்த்தி என்ற சொல்லானது இடுபொருள் மற்றும் செய்முறைகளை குறிக்கும் ஒரு பதமாகும். கீழ்கண்ட முறைகளில் ஏதாவது ஒரு முறையில் விதை நேர்த்தியானது செய்யப்படலாம்.

விதை மேல் பூசுதல் -இது பொதுவாக செய்யப்படும் ஒரு விதை நேர்த்தி முறையாகும். இந்த முறையில் விதையானது, உலர்ந்த வகை பொருட்களைக் கொண்டோ அல்லது கஞ்சி போன்ற பொருளில் நனைத்தோ அல்லது திரவப் பொருட்களைக் கொண்டோ முலாம் பூசப்படுகின்றது. இந்த விதை நேர்த்தி முறை பண்ணையிலும் தொழிற்சாலைகளிலும் செயல்ப்படுகிறது. பொதுவாக விதையுடன் பூச்சிக் கொல்லி மருந்துகளைக் கலப்பதற்கு மண் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றது. இதை தவிர விதைகளை பாலிதீன் பைகளின் மீது பரப்பி, அதன் மீது தேவையான அளவு மருந்தினை தெளித்தும் விவசாயிகள் விதை நேர்த்தி செய்யலாம்.

விதை மேலுறையிடுதல் -இம்முறையில் ஒரு சிறந்த ஒட்டும் பொருளைக் கொண்டு, நேர்த்தி செய்ய வேண்டிய விதையின் மேல் ஒட்டப்படுகிறது. தொழிற்சாலைகளில் விதை மேலுறையிடுவதற்கு, உயர்ந்த விதை நேர்த்தி தொழில்நுட்பமானது தேவைப்படுகிறது.

விதை முலாம் -இம்முறையானது விதைநேர்த்தி முறைகளில் மிகச் சிறந்த உயரிய முறையாகும். இதன் மூலம் விதையின் அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு, விதை முலாம்பூசப்பட்டு, அதைக் கையாளுவது எளிதாக்கப்படுகின்றது. இத்தகைய விதை நேர்த்தி முறைக்கு தனித்துவம் வாய்ந்த இயந்திரங்கள், செயல்முறை மற்றும் தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. இது மிகவும் அதிக செலவாகக் கூடிய ஒரு செயல்முறையாகும்.

விதைக்கும் முறைகள்

விதை மூலமாகப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதை நேர்த்தி செய்து விவசாயிகள் விதைக்க வேண்டும்.

ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் மருந்தை கொண்டு விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

K.Sakthipriya
Krishi Jagran 

Seed Treatment Seeds more Yeild Profit Crop growth
English Summary: Importance of Seed Treatment

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அய்யாக்கண்ணு வழக்கு!
  2. மின்மோட்டார், டீசல் பம்பு செட் அமைக்க 50% மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!!
  3. நெல் கொள்முதல் கடந்த ஆண்டைவிட 23 சதவீதம் அதிகம்!
  4. விவசாயிகளுக்கு பயனுள்ள இணையதள முகவரிகள்!
  5. அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழை; 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!!
  6. எப்படி இருக்கிறார் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு? - மருந்துவமனை விளக்கம்!!
  7. தண்ணீர் பயன்பாட்டின் சிக்கனம்! - "துணை நிலை நீர் மேலாண்மை திட்டம்" - வாரி வழங்கும் மானியம்!!
  8. ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்!
  9. கொல்லிமலையில், பாரம்பரிய சிறுதானியமான கேழ்வரகு சாகுபடி!
  10. வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீத அளவுக்கு குறைத்துள்ளது எஸ்பிஐ!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.