1. விவசாய தகவல்கள்

உரங்களில் எத்தனை வகை? தெரியுமா உங்களுக்கு!

KJ Staff
KJ Staff

பயிர் வளர, மண்ணின் வளத்தை அதிகரிக்க, விளைச்சலைக்கூட்ட உரங்கள் மிக மிக அவசியமாகின்றன. அந்த உரங்கள்  (Fertilizers) ஊட்டச்சத்துக்களின் நிலை, எண்ணிக்கை மற்றும் தன்மையைப் பொறுத்து பலவாறு வகைப்படுத்தப்படுகின்றன.

கரிம உரம் (Organic Fertilizer)

மண்ணின் இயற்பியல் பண்புகளை அதிகரிக்க, அதிக அளவு சேர்க்கப்படும் கரிமத்தை (C) கொண்டுள்ள இயற்கைப் பொருளே கரிம உரம் அல்லது இயற்கை உரம் எனப்படும். உம். தொழுஉரம், கம்போஸ்ட், பசுந்தாள் உரம், உயிர் உரம்.

கனிம உரம் (Inorganic Fertilizer)

பயிருக்குத் தேவையான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அளிக்கும் செயற்கைப் பொருளுக்கு கனிம உரம் அல்லது செயற்கை உரம் என்று பெயர்.

உ.ம், யூரியா, டைஅம்மோனியம் பாஸ்பேட், ஃபெர்ரஸ் சல்பேட்

 எண்ணிக்கையைப் பொறுத்து (Depending on the number)

நேரடி உரம் (Straight Fertilizer)

பேரூட்டச்சத்துக்களில் ஏதாவது ஒன்றை மட்டும் அளிக்கும் உரம் நேரடி உரம் எனப்படும். உ.ம். யூரியா – தழைச்சத்து சூப்பர் பாஸ்பேட் – மணிச்சத்து மியூரேட் ஆப்பொட்டாஷ்-சாம்பல் சத்து

கலப்பு உரம் (Mixed Fertilizer)

இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட நேரடி உரங்கள் சேர்ந்த கலவைக்கு கலப்பு உரம் என்று பெயர். கலப்பு உரம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் மூன்றையும் அளித்தால் அது முழுமையான உரம் எனப்படும்.

உ.ம். NO. 10 கலப்பு உரம், No. 8 கலப்பு உரம்

கூட்டு உரம் (Complex Fertilizer)

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயிர் ஊட்டச்சத்துக்களை ரசாயன முறைப்படி சேர்க்கப்பட்ட உரத்திற்கு கூட்டு உரம் என்று பெயர்.

உ.ம். 17:17:17 காம்ப்ளெக்ஸ், 19:19:19 காம்ப்ளெக்ஸ்

உரங்களின் தன்மையைப் பொறுத்த வகைப்பாடு

அமில உரங்கள் (Acidic Fertilizers) நிலத்தில் இவ்வகை உரங்களை தொடர்ந்து இடுவதால் அமிலத்தன்மை அதிகரிக்கும். உ.ம். அம்மோனியம் சல்பேட், ஜிப்சம்.

கார உரங்கள் (Basic Fertilizers)

நிலத்தில் இவ்வகை உரங்களை தொடர்ந்து இடுவதால், காரத்தன்மையை ஏற்படுத்தி நிலத்தின்  காரநிலையை அதிகரிக்கும். உ.ம். சோடியம் நைட்ரேட்

நடுநிலை உரங்கள் (Neutral Fertilizers)

இவ்வகை உரங்களை இடுவதால் நிலத்தில் அமிலத்தன்மையோ காரத்தன்மையோ ஏற்படுவதில்லை. உம். சூப்பர் பாஸ்பேட், பாறை பாஸ்பேட், கால்சியம் அம்மோனியம் நைட்ரேட்டு

 

English Summary: Types of Fertilizers Published on: 16 November 2018, 03:53 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.