1. செய்திகள்

PMFME : இயற்கை உணவு பதப்படுத்துதல் மையம் - தமிழகத்தில் 70 நிறுவனங்களுக்கு அனுமதி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Natural Food Processing Center

உணவு பதப்படுத்துதல் துறை சார்ந்த வசதிகளுக்கு நாடு முழுவதும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 70 மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உணவு பதப்படுத்தும் மையம் (Food processing center)

உத்தரப் பிரதேசத்தில் புதிய இயற்கை உணவு பதப்படுத்துதல் மையம் துவங்கப்பட்டது. ஆர்கானிக் இந்தியா (Organi India) நிறுவனம் உருவாக்கியுள்ள ரூபாய் 50.33 கோடி மதிப்பிலான இந்த மையத்தை, மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் திறந்துவைத்தார்.

விழாவில் பேசிய அமைச்சர், இந்த மையம் தொடங்கப்படுவதன் மூலம் 5 ஆயிரம் விவசாயிகள் பலன் அடைவார்கள் என்றார்.

Credit : Hindu tamil

கடந்த 2018-19ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2019-20ம் ஆண்டில் உணவுப் பதப்படுத்துதல் துறையில் நேரடி அன்னிய முதலீடு 44 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் இந்தத் துறை ஆண்டுக்கு 8.41 சதவீத வளர்ச்சி கண்டு வருவதாகவும் பாதல் தெரிவித்தார்.

இதற்கிடையே, உணவு பதப்படுத்துதல் துறை சார்ந்த வசதிகளுக்கு நாடு முழுவதும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் 71 மையங்களுக்கு அரசு கடந்த மாதம்  31ம் தேதி வரை ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் 14 குளிர்பதன கிடங்குகளும் 12 வேளாண் பதப்படுத்தும் மையங்களும் அடங்கும்.

மேலும் படிக்க...

அரசின் இலவச ஆட்டுக் கொட்டகைத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? விபரம் உள்ளே!

தண்டுப்புழுக்களைத் தெறிக்க விடும் அக்னி அஸ்திரம்- தெரியுமா உங்களுக்கு!

English Summary: PMFME : Natural Food Processing Center - Permission for 70 companies in Tamil Nadu!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.