1. விவசாய தகவல்கள்

RPMFBY: வேளாண் மானியங்களும் அதன் தகவல்களும்!

Poonguzhali R
Poonguzhali R
RPMFBY: Agricultural Subsidies and It's Information!

புல் நறுக்கும் இயந்திரம் வாங்க 10 லட்சம் மானியம்: விண்ணப்பிக்க நாளை காடைசி நாள்!

கால்நடைகளுக்கு பசுந்தீவன உற்பத்தியை பெருக்கும் வகையில், புல் அறுவடை செய்யும் இயந்திரம், புல் நறுக்கும் இயந்திரம் , டிராக்டர் போன்றவை வாங்க விவசாயிகளுக்கு தலா 25 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கான தீவனப் பற்றாக்குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியைப் பெருக்கவும் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மாநிலத் தீவன அபிவிருத்தி திட்டத்தில் பசுந்தீவன உற்பத்தியைப் பெருக்குவதற்காக விவசாயிகளுக்கு 25 சதவீதம் மானிய விலையில் பண்ணை கருவிகளை வழங்கி, அவர்களை தொழில்முனைவோராக உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நாளை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பரப்புரைக் கழகம் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கத்தில் தமிழ்ப் பரப்புரைக் கழகத்தினைத் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கலும், இளம் தலைமுறையினரும் தமிழ் மொழியைக் கற்பிக்கவும், பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு செல்லவும் பல்வேறு முயற்சிகளைத் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில், வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் தமிழைக் கற்பிக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குதல், தமிழ்ப் பாடநூல்கள் தயாரித்தல் முதலான பணிகளுக்கெனத் தமிழ்ப் பரப்புரைக் கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல் கட்டமாக ரூ. 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் 4 மொழிகளில் தமிழ் பாட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 30 நாடுகள், 20 மாநிலங்களைச் சேர்ந்த தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர்களும் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைய வழியாக இதில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிர்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு!

வேளாண்மைத்துறை மூலம் திருத்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் நடப்பு 2022-23ம் ஆண்டு சிறப்பு பருவத்திற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் வருவாய் கிராம அளவில் நெல் சம்பா மற்றும் பிர்க்கா அளவில் மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயிர்கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் அவரது சுய விருப்பத்தின் அடிப்படையில் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம். விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்திற்கும், அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு, புயல், ஆலங்கட்டி மழை, மண் சரிவு, வெள்ளம் போன்ற உள்ளூர் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும். . நெல் பயிருக்கு பிரிமயத் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.513, மக்காச்சோளம் பயிருக்கு பிரிமியத் தொகை, ஒரு ஏக்கருக்கு ரூ.390, பருத்தி பயிருக்கு பிரிமியத் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.423 ஆகும்.

இனி Whatsapp-இல் உங்கள் குரலையும் ஸ்டேட்டஸ் வைக்கலாம்! புதிய Feature அறிமுகம்!

வாட்ஸ்அப்பில் இனி நம்முடைய குரலையும் பதிவு செய்து ஸ்டேட்டஸாக வைக்கும் அம்சம் கொண்டு வரப்பட உள்ளதாக செய்தி வெளி வந்துள்ளது. வாட்ஸ்அப்பில் கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து என்னென்ன அப்டேட்டுகள் செய்ய வேண்டும் என்றும் செய்ய முடியும் என்றும் மும்முரமாகச் சோதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்பொழுது மேலும் ஒரு புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் பீட்டா சோதனை செய்து வருகிறது. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் போட்டோக்கள், வீடியோக்கள், மெசேஜ்களை வைத்து வருகிறோம். இனிமேல் கூடுதலாக வாய்ஸ் மெசேஜையும் ஸ்டேட்டஸாக வைக்க முடியும் எனக் கூறப்படுகிறது. சாதாரணமாக ஒருவருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது போல், ஸ்டேட்டஸ் பகுதியில் அனுப்பலாம் எனக் கூறப்படுகிறது. இதற்காக ஸ்டேட்டஸ் திரையில் ‘மைக்’ லோகோ வர இருக்கிறது. அதனைக் கிளிக் செய்து, 30 நொடிகள் வரையிலான குரல்பதிவை வாய்ஸ் ஸ்டேட்டஸ் வைத்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

இன்றைய வேளாண் சார்ந்த முக்கிய தகவல்களும் நடைமுறைகளும்!

இன்றைய வேளாண் குறித்த புதிய அறிவிப்புகள்!

English Summary: RPMFBY: Agricultural Subsidies and It's Information! Published on: 25 September 2022, 04:43 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.