1. விவசாய தகவல்கள்

களைக்கொல்லி பயன்படுத்துவதில் உள்ள நன்மை- தீமைகள் என்ன?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
What are the pros and cons of using herbicides

பயிர்களுக்கு ஊடே வளரும் களைகளை கட்டுப்படுத்த களைக்கொல்லி பயன்படுத்துவது இன்றைய விவசாய நடைமுறையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில் களைக்கொல்லியினால் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகள் குறித்த தகவல்களை வேளாண் ஆலோசகர் சந்திரசேகரன் விளக்குகிறார். அவற்றின் விவரம் பின்வருமாறு-

பொதுவாக விவசாய நிலத்தில் மழை பெய்தவுடன் முளைக்கும் களைகள் இயற்கையின் அற்புதமான படைப்பு. இவை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது. முன்பெல்லாம் சித்திரை பிறந்தவுடன் நாம் முன்னோர்கள் வீட்டில் உள்ள கால்நடைகளைக் கொண்டு உழவு போட்டு வருவார்கள்.

களை எடுக்காத பயிர் கால் பயிர் என்பது போல விவசாய நிலத்தில் களைகள் எங்கும் நீக்கமற உள்ளன. அவற்றை அழிக்க களைக்கொல்லிகளை பயன்படுத்துக்கிறோம். அவை நன்மையா? தீமையா? என்று விரிவாக பார்ப்போம்.

களைகள் ( WEEDS) என்றால் என்ன?

களைகள் என்பது பயிரிடப்படும் நிலத்தில் முளைத்தால் அது தேவையில்லாத தாவரம். இவை பயிருடன் போட்டி போட்டிக்கொண்டு வளரும். இதனால் பயிரின் வளர்ச்சி தடைபட்டு மகசூல் 40% பாதிக்கும். இவற்றை பயிரின் இளம் வளர்ச்சி நிலையிலே கட்டுபடுத்த வேண்டும்.

நிலத்தில் முளைக்கும் களைகளின் விவரம்:

அருகு, கோரை, சாரணை, துத்தி நாயுருவி, குப்பை மேனி, பார்த்தீனியம் போன்றவை

களைக்கொல்லி அடிப்பதால் உண்டாகும் தீமைகள்:

  • மண்வளம் பாதிக்கப்பட்டு மண்ணில் உள்ள நூற்றுக்கணக்கான நுண்ணுயிர்களின் வளர்ச்சி தடைபடும்.
  • நெற் பயிரில் வளரும் களைகளை அகற்றிவிட்டால் மண்ணின் தழைசத்து  பாதிக்கும் மண்ணில் உரமாகுவது தடுக்கப்படும்.
  • மண்ணின் இயற்கை தன்மையும் பாதித்து மண் மலடாக மாறும் நிலை உருவாக்கும்
  • கப்பட்ட கூலி தொழிலாளர்களின் வேலைவாய்புக்கும் காரணமாக களைக்கொல்லி உள்ளது.
  • களைக்கொல்லியால் மூலிகை தாவரங்கள் அழிக்கப்படுவதுடன் கால்நடைகளின் மேயச்சல் தளமும் அழிந்து விடும்.

களைக்கொல்லி அடிப்பதால் உண்டாகும் நன்மைகள்:

மண்ணில் உள்ள அனைத்து களைகளையும் கட்டுப்படுத்துக்கிறது. களைக்கொல்லி தயாரிப்பு பெரும்பாலானவற்றில் கார்பன் தான் பயன் படுத்தப்படுகிறது.

  • வ்வொரு பயிருக்கேற்ற களைக்கொல்லி வந்துவிட்டது. இவை மண்ணில் வேதி வினைபுரிந்து களை வளர்ச்சியினை கட்டுப்படுத்துகின்றன.
  • களைக்கொல்லியினை பயிர் நடவு செய்த 3- 5 நாட்கள், 10-15 நாட்கள், 30-40 நாட்கள் என 3 முறையில் பயன்படுத்தப்படுகிறது
  • பூச்சிக் கொல்லி மருந்து அட்டை பெட்டியில் இருப்பது சிவப்புநிற முக்கோணம் ஆனால் களைக்கொல்லியில் இருப்பது பச்சை நிற முக்கோணம்.
  • களைக்கொல்லி அளவு படிப்படியாக குறைக்க பட்டுவருவதால் பாதிப்பும் குறையும் ( முன்பெல்லாம் லிட்டர் கணக்கில் தெளிக்க பட்டவை, இன்று 60- 80மி.லி அளவில் தெளிக்கப்படுகிறது)
  • ஆட்கள் பற்றாக்குறையாக உள்ள காலத்தில் களைகளை கட்டுப்படுத்த களைக்கொல்லி அதிகமாக பயன்படுகிறது.

பொதுவாக களைகள் நிறைய முளைப்பதற்கு சரியான உழவு முறை இல்லாது தான் காரணம். மேலும் களைகளை கட்டுப்படுத்த பயிர் சுழற்சி முறையில் பயிர் செய்ய வேண்டும். அந்த காலத்துல கோரை அருகுகளின் கிழங்குகளை ஆட்களை வைத்து தோண்டி தோண்டி எடுப்பார்கள். சோளம்,வரகு போன்ற பயிர்களை சாகுபடி செய்வார்கள். அதன் மூலம் படிப்படியாக களைகளை கட்டுக்குள் வைத்தனர்.

டெம்பிள்டன் என்பவரால் முதன்முறையாக களைக்கொல்லி 2-4-D கண்டுபிடிக்கப்பட்டது. பசுமை புரட்சிக்கு பின் களைகளை கட்டப்படுத்த நிறைய களைக்கொல்லிகள் அட்ரசின் கிளைபோசைட் போன்ற களைக் கொல்லிகள்( HERBICIDES) வந்து விட்டன. தற்போதை நிலையில் களைக்கொல்லி தெளிக்காமல் விவசாயம் செய்ய முடியாத நிலையில் தான் இன்றைய உழவர்கள் உள்ளனர். எந்த ஓரு பொருளும் பயன்பாட்டில் நன்மையும் தீமையும் உள்ளது, இதற்கு களைக்கொல்லியும் விதிவிலக்கல்ல.

களைக்கொல்லி தெளிக்கும் போது பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ தெளிக்க கூடாது. நிலத்தில் ஈரம் இருக்க வேண்டும். விசறி டைப் நாசிலை பயன்படுத்தி தெளிக்க வேண்டும். தெளிக்க பட்ட இடத்தில் நடக்க கூடாது.

மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் மாற்றுக்கருத்துகள் இருப்பின் வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் அவர்களை தொடர்புக் கொள்ளலாம். தொடர்பு எண்: 9443470289

மேலும் காண்க:

சுதந்திரத் தினத்தன்று சென்னையில் குவியும் விவசாயிகள்- எதற்காக?

45 நாட்களில் 50 லட்சம்- தலைகால் புரியாத மகிழ்ச்சியில் தக்காளி விவசாயி

English Summary: What are the pros and cons of using herbicides Published on: 06 August 2023, 10:26 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.