1. விவசாய தகவல்கள்

UREA GOLD: தழைச்சத்துக்கான யூரியா கோல்ட் உரத்தின் அம்சங்கள் தெரியுமா?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
The features of UREA GOLD fertilizer

தழைச்சத்துக்காக யூரியாவினை பயன்படுத்தாத விவசாயிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். பயிர்களின் வளர்ச்சிக்கும், செழுமைக்கும் பச்சைபசேல் என்ற இலையின் தோற்றத்திற்கும் பரிந்துரைக்க பட்ட அளவை விட கூடுதலாக தான் இந்த யூரியாவை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர் என வேளாண் ஆலோசகர் அக்ரி சந்திரசேகரன் தெரிவிக்கிறார்.

யூரியா பயன்பாட்டினை படிப்படியாக குறைக்க அரசு முயன்றாலும் கூட, விவசாயிகளோ யூரியா உரத்தை நிலத்தில் போட்டால்தான் நிம்மதியடைகின்றனர் என தெரிவிக்கும் அக்ரி சந்திரசேகரன், யூரியா பற்றியும்- யூரியா கோல்ட் உரத்தை பற்றியும் பல தகவல்களை நமது கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார். அவர் அளித்த தகவல்கள் விவரம் பின்வருமாறு-

பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ( 14.08.2023) அன்று " யூரியா கோல்ட்" உரத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்தினார் என்பது அனைவருக்கும் நினைவில் இருக்கலாம்.

யூரியா என்றால் என்ன?

பயிர்வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்தை தருவது, யூரியா. CO(NH2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமசேர்மமாகும். யூரியா என்பது ஒரு வெள்ளை நிறபடிக கரிம இரசாயன கலவை ஆகும். இதனுடைய PH நடுநிலையானது. அனைத்து விதமான மண் வகைகளுக்கும் ஏற்றது. இது பயிருக்கு உரமாகவும், கால்நடை தீவனச் சேர்க்கையிலும் பயன்படுத்தப்படுகிறது. இது கார்பமைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றன.

யூரியா எப்படி உருவாகிறது தெரியுமா?

பாசுகீன் அம்மோனியாவுடன் வினைப்புரிந்தாலும் யூரியா உருவாக்கிட முடியும். ஆல்க்கைல் தயோயூரியா, கந்தக ஆல்க்கையேற்ற வினைவழியாக ஒர் உடன் விளைபொருளாக யூரியா உருவாகிறது. ஐசோதயோ யூரோனியம் உப்பு இடைநிலை பொருட்கள் வாயிலாகவும் யூரியாவை உருவாக்கிட முடியும்.

யூரியா கோல்ட்( UREA GOLD ) பற்றிய தகவல்கள்:

இந்த உரத்தில் 37% நைட்ரஜனும், 17% கந்தகமும் (SULPHUR) உள்ளன. இது சல்பர் பூசிய யூரியாவாகும். ஏற்கனவே வேம்பு பூசிய யூரியா, மற்றும் திரவ யூரியா (NANO UREA) போன்றவை உள்ளன. வேம்பு பூசிய யூரியாவை விட சல்பர் பூசிய யூரியாவின் விலை 12.5% அதிகம். இதனால் வழக்கமாக யூரியா விற்பனை செய்யப்படுகின்ற அளவான 45 கிலோ மூட்டைக்கு பதிலாக இந்த UREA GOLD 40 கிலோ மூடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் இந்த இரண்டு யூரியாவின் விலை விவசாயிகளின் நலன்கருதி ஒரே விலையில் அதாவது ரூ.266.50 என்கிற விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

(வழக்கமான பயன்பாட்டில் உள்ள உரத்தில் 46% நைட்ரஜன் உள்ளது. அதே போல வானில் 78% நைட்ரஜன் உள்ளன) இந்த உரத்தை RCF உரத்தொழிற்சாலை தயாரிக்கிறது.

உரங்களை பொருத்தவரை விலை மற்றும் விநியோகத்தை மத்திய அரசு தான் நிர்ணயிக்கிறது. யூரியா உரத்திற்கு அதிகமாக மானியம் அதாவது மூட்டைக்கு ரூ.2000 வழங்கப்படுவதால், விவசாயிகளிடையே பெருமளவில் பயன்பாட்டில் யூரியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: PMFBY பயிர் காப்பீடு- என் பாலிசி என் கையில் நோக்கம் என்ன?

யூரியா கோல்ட் எந்தெந்த பயிருக்கு இடலாம் ?

இந்த உரம் எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை, எள், சூரிய காந்தி போன்ற பயிர்களுக்கும், பயறுவகைகளான துவரை,உளுந்து, பாசிபயறு போன்ற பயிர்களுக்கு இடுவதன் மூலமாக நல்ல மகசூல் கிடைக்குமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் அல்லது முரண்கள் இருப்பின் கட்டுரை ஆசிரியரான வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் அவர்களை தொடர்புக் கொள்ளலாம். (தொடர்பு எண்: 94435 70289)

Read more:

8 மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி- அரசாணை வெளியீடு!

MFOI Samridh Kisan Utsav- மில்லினியர் விவசாயிகளை கௌரவித்த மத்திய அமைச்சர்

English Summary: The features of UREA GOLD fertilizer for fertility Published on: 25 February 2024, 04:43 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.