Krishi Jagran Tamil
Menu Close Menu

பயிா்களை பூச்சிகளின் தாக்குதலில் இருந்து எவ்வாறு பாதுகாப்பது?

Wednesday, 09 October 2019 04:31 PM
Prepared Land

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தோட்டங்களில் உள்ள காய்கறிகள், பழங்கள், இலைகள் போன்றவற்றை பூச்சிகள் முதலியன தாக்கும் என்பதால் அவற்றிலிருந்து பயிர்களை பாதுகாப்பதற்கான யுக்திகளை தோட்டக்கலைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. பொதுவாக வெயில் காலங்களில் பூச்சிகளின் தாக்குதல் குறைவாகவே இருக்கும். ஆனால் மழை காலங்களில் வெப்பநிலை குறைவதும், காற்றில் ஈரப்பதம் அதிகமாவதும் இயற்கையே. இதன் காரணமாக பூச்சி மற்றும் நோய்களின் தாக்கம் பயிா்களில் அதிகமாகவே காணப்படும். தோட்டங்களை களைகள் இன்றியும், காய்ந்த இலை தளைகள் இன்றியும் பராமரிப்பதன் மூலம் பூச்சி, நோய்களின் பெருக்கத்தை குறைக்கலாம்.

பருவமழை அதிகமானால்  வெள்ளம் மற்றும் புயல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். இதன் காரணமாக பயிர்கள் சேதமடைவதுடன் பூச்சிகளின் தாக்குத்தல் பயிர்களில் அதிக அளவில் தென்படும். தோட்டங்களை களைகள் நிக்கி முறையாக பராமரிப்பதன் மூலம்  பூச்சி மற்றும் நோய்களின் பெருக்கத்தை குறைக்கலாம். பூச்சிகளை இனக்கவர்ச்சி பொறி மூலம்  ஆண் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். அதேபோல்  இரவு நேரங்களில், பண்டைய முறையில் ஒரு விளக்கு பொறிகளை வைத்து பெண் பூச்சிகளை கவர்ந்து அழிப்பதன் மூலம் முட்டையிட்டு பெருகுவதை பெருமளவில் தடுக்கலாம்.

Life Fence

பராமரிப்பு முறைகள்

 • மழை தொடங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்பு தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்தி விட விடும். அப்போது தான் மரதின் வேர்ப்பகுதி இறுகி காற்றில் சாயாமல் தடுக்கலாம். அத்துடன் களைகள், காய்ந்த இலைகள் போன்ற வற்றை அகற்றி முறையான வடிகால் அமைத்து வைத்திருக்க வேண்டும்.
 • தக்காளி, கத்தரி, மிளகாய் மற்றும் கொடிவகை காய்களை முறையாக மண் அணைப்பதன் மூலம் பாதுகாப்பதினால் வேர்களில் நீர் தேங்குவதை தடுத்து வேர்ப்பகுதி அழுகுவதை கனிசமாக தவிர்க்கலாம்.
 • மழைக்காலங்களில்  திறந்தவெளியில் காய்கறிப் பயிர்களை நடவு செய்து நாற்றாங்கால் அமைப்பதை தவிர்த்து,  குழித்தட்டுகளிலோ அல்லது பசுமை குடில்களில் நாற்றுகளை அமைத்து உற்பத்தி செய்யலாம்.
 • காற்றினால் வாழை மரம் பாதிப்பு இல்லாமல் இருக்க கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண்ணினால் அணைத்தல் செய்ய வேண்டும்.
 • காற்று மரங்களின் இடையே எளிதாக நுழைந்து செல்லும் வகையில் பக்கக் கிளைகளையும் அதிகப்படியான இலைகளை கவாத்து செய்யலாம்.
 • மலைத்தோட்டப் பயிர்களான காபி, மிளகு, டீ, ஆரஞ்சு போன்றவற்றில் ஏற்படக்கூடிய நோய்களைத் தடுக்க ஓரங்களில் உள்ள நிழல் தரும் மரங்களின் தேவையற்ற கிளைகளை அகற்றி பயிர்களை பாதுகாக்கலாம்.
Pest Control
 • மலைத்தோட்டப் பயிர்களான காபி, மிளகு, டீ, ஆரஞ்சு போன்றவற்றில் ஏற்படக்கூடிய நோய்களைத் தடுக்க ஓரங்களில் உள்ள நிழல் தரும் மரங்களின் தேவையற்ற கிளைகளை அகற்றி பயிர்களை பாதுகாக்கலாம்.
 • நாம் வசிக்குமிடத்தை சுற்றியுள்ள மரங்களின் கிளைகளை  வெட்டி விட வேண்டும். அதேபோன்று நோய்வாய்ப்பட்ட செடிகளையும்,  களைகளையும் முற்றிலுமாக  அகற்ற வேண்டும்.
 • பெரிய மரங்கள் உள்ளது எனில் அதை சுற்றி மண் அணை அமைக்க வேண்டும். சிறிய கன்றுகள் மற்றும் ஒட்டுச் செடிகளை முட்டுக் கொடுத்து வைப்பதன் மூலம் மரங்களை நிலை நிறுத்திக் கொள்ளலாம்.
 • பசுமைக்குடில்  மற்றும் நிழல்வலைக் கூடங்களின்  அருகிலுள்ள பெரிய மரங்களில் கிளைகளை அகற்றிவிடவேண்டும். மேலும் காற்றின் வேகத்தை குறைக்கக்கூடிய  சவுக்கு மரங்களை உயிர்வேலியாக அமைப்பதன் மூலம் காற்றின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் மழை மற்றும் பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்ககலாம்.

Anitha Jegadeesan
Krishi Jagran 

NorthEast Monsoon Plant Protection During Rainy Season Horticulture Announcement Tips to care for your plants During monsoon
English Summary: Are you looking for guidance, how to take care of plants during monsoon?

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Monsoon 2020 update on Krishi Jagran Tamil Help App

Latest Stories

 1. விவசாயத்தில் இரட்டை லாபம் ஈட்ட வேண்டுமா? வேளாண்மை மீன் வளர்ப்பில் ஈடுபடுங்கள்!
 2. இலக்கை மிஞ்சிய குறுவை சாகுபடி - குவியும் நெல் மூட்டைகள்!
 3. நீலகிரிக்கு தொடரும் ரெட் ஆலர்ட்; அதி கன மழைக்கும் வாய்ப்பு!!
 4. வியாபாரச் சான்றிதழ் இல்லாத வணிகர்களும் PM SVANidhi திட்டத்தில் பயன்பெறலாம்!!
 5. மானாவாரி துவரையில் அதிக மகசூல் பெற வேண்டுமா? வேளாண்துறை அளிக்கும் ஆலோசனைகள்!!
 6. சத்தான சமச்சீர் உணவிற்கு அவசியமான கீரைகளும் அதன் நன்மைகளும்!
 7. குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் தரும் காடை வளப்பு!
 8. பான் அட்டைத் தொலைந்துவிட்டதா? கவலைவேண்டாம்! ஆன்லைனில் மறுபிரதி எடுத்துக்கொள்ள வழிமுறைகள்!
 9. PMKSY: சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க விருப்பமா? 100% மானியம் தருகிறது மத்திய அரசு!
 10. நீலகிரி, கோவை, தேனிக்கு ரெட் அலேர்ட்! 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.