1. வாழ்வும் நலமும்

குளிர்சாதனப் பெட்டியை விடவும் மண்பானை தான் மிகவும் சிறந்தது: ஆனந்த் மஹிந்திரா ட்விட்!

R. Balakrishnan
R. Balakrishnan
Clay Pot is best

கோடைகாலம் தொடங்கி விட்டதால் பொதுமக்கள் பலரும் குளிர்ச்சியைத் தேடிச் செல்கின்றனர். இந்நிலையில், குளிர்சாதனப் பெட்டியை விடவும் மண்பானையே மிகவும் சிறந்தது என தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

ஆனந்த் மஹிந்திரா ட்வீட் (Anand Mahindra Tweet)

சமூக வலைதளப் பதிவுகள் மூலம் தற்போது பலரது கவனத்தையும் ஈர்ப்பவர் ஆனந்த் மஹிந்திரா. "குளிர்சாதனப் பெட்டியை விட மண்பானையே மிகச் சிறந்தது" என அவர் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் இப்போது கோடைகாலம் நிலவி வருவதனை சுட்டிக் காட்டும் வகையில், இந்த ட்வீட் அமைந்துள்ளது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருபவர் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா. பலரின் கண்டுபிடிப்புகளை அடையாளம் கண்டு வாழ்த்துவது, சில சமயங்களில் அதனை வடிவமைத்தவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பது போன்றவை அவருடைய வழக்கம். அதோடு நின்று விடாமல், கவனம் ஈர்க்கும் சில வகைப் பதிவுகளையும் பகிர்வார். அவ்வகையில் இந்த மண்பானை vs குளிர்சாதன பெட்டி ட்வீட் அமைந்துள்ளது.

வெளிப்படையாகச் சொல்வது என்றால் அழகியல் பார்வை அடிப்படையிலும், வடிவமைப்பு ரீதியாகவும் மண்பானையே சிறந்தது. நம் பூமிக்கு ஏற்ற வகையில், நேர்மறையாக உலகம் கவனம் செலுத்தி வரும் சூழ்நிலையில், பானை நம் வாழ்க்கை முறையில் சிறந்த அக்ஸசரியாக இருக்கும் என ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில் பானை மற்றும் குளிர்சாதன பெட்டியின் விலை, லைஃப்-டைம், மெயின்டன்ஸ் ஆகியவை ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

7 வது ஊதியக்குழு: அரசுப் பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் உயர்வு!

ரேசன் கடையில் அரிசி கோதுமை இனி கிடையாது: காரணம் இதுதான்!

English Summary: A clay pot is better than a fridge: Anand Mahindra Tweet! Published on: 15 May 2023, 11:56 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.