1. வாழ்வும் நலமும்

உடல் நலனில் அக்கறை காட்டும் தேங்காய் மாவின் அற்புத நன்மைகள்!

R. Balakrishnan
R. Balakrishnan
Coconut Powder

உலர வைத்த தேங்காயிலிருந்து தேங்காய் மாவு தயாரிக்கப்படுகிறது. தேங்காய்ப் பால் தயாரிப்பின்போது கிடைக்கும் உப பொருள் தான் தேங்காய் மாவு ஆகும். மற்ற மாவை விட இது சற்று கருமை நிறத்தில் இருக்கும். ஓட்ஸ், சோளமாவு உள்ளிட்ட பிற மாவை விட கடினமானதாக இருக்கும். இதில் கொழுப்பு சத்து குறைவாக இருக்கும். இதை ஆறு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். கோதுமை மாவுக்குப் பதில் இதைப் பயன்படுத்தலாம். எளிதில் ஜீரணமாகும் தன்மையும் கொண்டதாகும்.

தேங்காய் மாவு (Coconut Powder)

தேங்காய் மாவில் நிறைய சத்துக்கள் உள்ளன. அதிக அளவில் புரோட்டீன் உள்ளது. நார்ச்சத்து உள்ளது. இதுதவிர புரோட்டீன் 14.3 சதவீதம், கொழுப்பு 54, கார்போஹைட்ரேட் 23.4, டயட் பைபர் 20.5, சாம்பல் 1.5, ஈரப்பதம் 6.7 சதவீதம் உள்ளது. இதேபோல எனர்ஜி 50 கிலோ கலோரி, புரோட்டீன் 2 கிராம், கொழுப்பு 3 கிராம், கார்போஹைட்ரேட் 8 கிராம், இரும்பு 1.08 மில்லி கிராம், பொட்டாசியம் 200 மில்லி கிராம், சோடியம் 15 மில்லி கிராம் உள்ளது.

பயன்கள் (Benefits)

தேங்காய் மாவில் ஆர்ஜினின் என்ற அமினோ அமிலம் அடங்கிய புரதம் உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். மேலும் நார்ச்சத்தும் உள்து. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு இது சரியான டயட் ஆகும்.

அதிக அளவிலான நார்ச்சத்து உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் சீரம் கொலஸ்டிரால் அளவு குறையும், ரத்த அழுத்தம் குறையும் என ஆய்வுகள் சொல்கின்றன. தேங்காய் மாவும் கொலஸ்டிராலைக் குறைக்க உதவுகிறது. இதனால் கல்லீரலுக்கும் நல்லது, இதயத்திற்கும் இதமானது

தேங்காய் மாவில் பீனால், பிளேவினாய்டுகளும் உள்ளன. இவை கீமோ புரொடெக்டிவ் சக்தியை அளிக்கின்றன. இது புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சக்தியை உடலுக்கு அளிக்கிறது.

தேங்காய் மாவில் நிறைய நார்ச்சத்து உள்ளது. இதனால் சிறுகுடல் சீராகும். சாப்பிட்ட சாப்பாடு எளிதில் ஜீரணமாகும். கணையப் பகுதியில் தண்ணீர் அதிகம் சேமிக்கப்படும். மலம் கழிவதும் எளிதாகும். இரைப்பை குடல் கோளாறுகள் உள்ளவர்களுக்கு அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் அல்லது தேங்காய் மாவு போன்ற சப்ளிமெண்ட்ஸ் பரிந்துரைக்கப்படுகிறது.

தேங்காய் மாவில் கார்போஹைட்ரேட் இருப்பதால் இது ஜீரண மண்டலப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. குடலில் நல்ல பாக்டீரியா வளர உதவுகிறது. இதனால் அஜீரண பிரச்சினை குறையும்.

இதில் உள்ள நார்ச்சத்து தேவையில்லாத கொழுப்பைக் குறைக்கும். தேவையில்லாத நீரை இது உறிஞ்சி விடும். இதனால் உடலின் எடையும் வெகுவாக குறையும்.

தேங்காய் மாவானது தினசரி சாப்பிடக் கூடிய வகையிலான நல்ல ஆரோக்கியமான உணவாகும். இது உங்களது உணவுப் பழக்கத்தில் தினசரி சேர்த்துக் கொண்டால் உடலுக்கும் ஆரோக்கியம்

தேங்காய் மாவை உட்கொள்பவர்கள் குளிர்பானங்கள் மற்றும் சாக்லேட்டுகள் போன்ற தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து விலகி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தேங்காய் மாவு நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். எடை மேலாண்மைக்கும் உதவும்.

மேலும் படிக்க

ஆரோக்கியம் நிறைந்த பாதாம் பால் காஃபி, டீ!

பாப்கார்ன் விலை தியேட்டரில் ஏன் அதிகம்? காரணம் இது தான்!

English Summary: Amazing health benefits of coconut flour! Published on: 14 August 2022, 12:36 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.