1. வாழ்வும் நலமும்

குங்குமப்பூ தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

R. Balakrishnan
R. Balakrishnan
Saffron water

ஒரு பூவினுடைய மகரந்தங்கள் சேகரிக்கபட்டு, அவற்றை உலர்த்தி எடுப்பதன்மூலம் நமக்குக் கிடைப்பது தான் இந்த குங்குமப்பூ. குங்குமப்பூவில் அதிக அளவிலான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன. இது நம்முடைய உடலில் வெப்பத்தை சீராக வைத்திருப்பது முதல் பல்வேறு நன்மைகளை செய்யக் கூடியது. குங்குமப்பூவை மிகக் குறைந்த அளவில் எடுத்து குடிக்கும் தண்ணரில் சேர்த்துக் கொண்டால் ஏராளமான மருத்துவப் பலன்களைப் பெற முடியும்.

குங்குமப்பூ பயன்கள் (Benefits of Saffron water)

சரும பாதுகாப்பு (Skin Protection)

தண்ணீர் நிறைய குடிப்பது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். அதே தண்ணீரில் ஒரு சிறிய குங்குமப்பூவை சேர்த்து குடித்து வந்தால், குங்குமப்பூவில் இருக்கும் ஆன்டி- ஆக்ஸிடண்ட்டுகள் சருமத்தில் உள்ள ஃப்ரீ-ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடுவதோடு அவை உருவாகாமல் பார்த்துக் கொள்ளும். சரும பாதிப்பை தடுக்கும் ஆற்றல் கொண்டது. உடலில் இருக்கும் நச்சை நீக்கி செல்களில் இருந்து சருமத்துக்கு புத்துணர்வைத் தரும். ஆன்டிஆக்ஸிடன்ட் சருமத்தில் பொலிவையும் இளமையையும் தக்கவைக்க உதவும். ஆரோக்கியமான, பளபளப்பான, மாசு மருவில்லாத சருமம் வேண்டுமென்றால் ஸாஃபிரான் தண்ணீரை குடிக்கலாம்.

மாதவிடாய் வலியை குறைக்க (To reduce menstrual pain)

மாதவிடாய் காலத்தில் பெண்கள் மனதளவிலும் உடலளவிலும் அடையும் துன்பத்தை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அந்த சமயத்தில் ஏற்படும் வயிற்றுப் பிடிப்பு மற்றும் வலியைக் குறைப்பதற்கு குங்குமப்பூ உதவும். மாதவிடாய் தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே குங்குமப்பூவை தண்ணீரில் போட்டு குடித்து வர வேண்டும். இது அந்த மாதவிடாய் சுழற்சி நேரத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை சரிசெய்ய உதவும்

உடல் எடை குறைய (To weight loss)

உடல் எடையைக் குறைப்பதில் ஆன்டி - ஆக்சிடண்ட்டுகளுக்கு மிகச்சிறந்த இடமுண்டு. உடலில் உற்பத்தியாகும் கார்டிசோல் உற்பத்தியைக் குறைத்து செல்களுக்கு புத்திணர்ச்சி அளிக்கிறது. இதனால் மன அழுத்தம் குறையும். மேலும் இவற்றில் உள்ள சில ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி பசியையும் கட்டுப்படுத்துகிறது. உடலின் மெட்டாலிசத்தை இப்படி குங்குமப்பூ சீராக வைத்திருக்கச் செய்வதால் உடல் எடை குறைய ஆரம்பிக்கிறது.

குங்குமப்பூ தண்ணீர் (Saffron water)

குங்குமப்பூவை அதிக அளவில் சாப்பிடக் கூடாது. எனவே, ஒன்று முதல் அதிகபட்சமாக மூன்று குங்குமப்பூ இதழ்களை ஒரு அரை லிட்டர் தண்ணீரில் முதல் நாள் இரவே போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அடுத்த நாள் காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு வெறும் வயிற்றில் இந்த நீரை குடிக்க வேண்டும்.

மேலும் படிக்க

மூளையைப் பாதுகாக்க இதையெல்லாம் நாம் தவிர்க்க வேண்டும்!

சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் டி5 சூரணம்: சித்த மருத்துவர்கள் அசத்தல்!

English Summary: Are there so many benefits of drinking saffron water Published on: 31 July 2022, 06:46 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.