1. வாழ்வும் நலமும்

தினமும் 2 ஏலக்காயை சாப்பிட்டால், பல நன்மைகள் கிடைக்கும்!

Ravi Raj
Ravi Raj
Eat 2 Daily Cardomom..

இந்தியர்களின் இல்லங்களில் பயன்படுத்தக்கூடிய மசாலா வகைகளில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் நன்மைகள் இருக்கும் என்பதை அறிந்திருந்தாலும் அதன் வாசனையே அந்த உணவின் நுகர்வை அதிகரிக்கிறது.

ஏலக்காயும் இஞ்சி குடும்பத்தைச் சார்ந்தது என்று சொல்லப்படுகிறது. இரண்டிற்குமான ஆரோக்கிய நன்மைகள் ஒன்றாகவே இருக்கின்றன. ஏலக்காய் உணவை சுவையாக்குவது மட்டுமல்லாமல், வாய் துர்நாற்றம், இதயம் தொடர்பான பிரச்சனைகள், விக்கல், தோல் தொற்று நோய் போன்றவற்றில் இருந்தும் விடிப்பட உதவுகிறது. எனவே ஏலக்காயில் என்னென்ன நன்மைகள் என்று பார்க்கலாம்.

ஏலக்காயில் என்ன சத்துகள் உள்ளது:
ஏலக்காயில் கார்போஹைட்ரேட்டுகள், உணவு நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை காணப்படுகின்றன, அவை ஆரோக்கியமான உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.

ஏலக்காய் சாப்பிடுவது எப்படி?
ஏலக்காயை பல வழிகளில் உட்கொள்ளலாம். இதனை வாய் ப்ரெஷ்னராக நேரடியாகச் சாப்பிடலாம். எந்த உணவையோ அல்லது காய்கறிகளையோ செய்யும் போது, ​​அதனுடன் ஏலக்காய் ஐ சேர்த்து சாப்பிடலாம்.

ஏலக்காயை எந்த நேரத்தில் சாப்பிடலாம்?
இயற்கையாக தூங்க, தினமும் இரவில் தூங்கும் முன் குறைந்தது 3 ஏலக்காயை வெதுவெதுப்பான நீரில் போட்டு சாப்பிடுங்கள். இதனால் நல்ல உறக்கம் வருவதுடன் குறட்டை பிரச்சனையும் நீங்கும். இது தவிர, கேஸ், அசிடிட்டி, மலச்சிக்கல், வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்சனைகளை ஏலக்காய் மூலம் போக்கலாம்.

ஏலக்காயின் அற்புதமான நன்மைகள்:
* பருவநிலை மாற்றத்தின்போது உண்டாகும் சளி, இருமல், காய்ச்சலுக்கு வீட்டு வைத்தியமாக இருக்கிறது.
* மனப்பதட்டம், குமட்டல் போன்றவற்றிற்கும் உதவுகிறது. அதோடு நோய் எதிர்ப்பு அழற்ச்சி, பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் பண்பு, நோய் எதிர்ப்பு சக்தி என உடலின் எந்த ஆரோக்கிய பாதிப்புகள் நேர்ந்தாலும் அதை எதிர்த்துப் போராடும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு.
* உடல் பருமன் , உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு, போன்ற பிரச்னைகளுக்கும் ஏலக்காய் கைக்கொடுக்கிறது.
* ஏலக்காய் நீரிழிவு நோயாளிகள், ஆஸ்துமா, இதய பாதிப்பு கொண்டவர்கள் என தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலன் அளிக்கிறது.

* மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் மனநிலையை மாற்றும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு.
* ஏலக்காய் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதிலுள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
* இயற்கையாகவே ஏலக்காய் புற்று நோய் எதிர்ப்பு தன்மை கொண்டுள்ளது. விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வின் படி ஏலக்காய் புற்று நோய் வராமல் தடுக்கவும், தள்ளிப் போடவும், புற்று நோய் உருவாகாமல் தடுக்கவும் செய்கிறது.

மேலும் படிக்க..

ஏலக்காய் நீர் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது!

இரவில் தூங்கும் முன்பு 2 கிராம்பு+Hot water- ஆச்சர்யப்படுத்தும் நன்மைகள்!

English Summary: Daily Eat 2 Cardomoms and you Will get so Many Benefits! Published on: 26 April 2022, 04:27 IST

Like this article?

Hey! I am Ravi Raj. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.