1. வாழ்வும் நலமும்

தொற்றுநோய்களைத் தடுக்கும் ஊட்டச்சத்து அணுகுண்டு எது தெரியுமா?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Do you know what a nutrient atomic bomb is to prevent infections? That's the chunk!
Credit : Pinterest

அறுசுவைகளில், கசப்பும், துவர்ப்பும் பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது. அதிலும், கசப்பை இன்றையத் தலைமுறையினர் முற்றிலும் விலக்கி வைக்கிறார்கள். உண்மையில், கசப்பு தரும் உண்வுப்பொருட்களில்தான் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இரண்டு சுவைகள் (Two flavors)

அந்த வகையில் கசப்பு, துவர்ப்பு என இரண்டு சுவைகளையும் கொண்டது சுண்டைக்காய் (Turkey berry). முருங்கைக் காயை விட இரும்புச் சத்து மிகுந்து காணப்படுவது சுண்டைக்காயில்தான்.

பல வகை உணவுகள் (Many types of food)

பல பெயர்களில் அழைக்கப்படும் சுண்டைக்காயை பல வழிகளில் நம்முடைய உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம். வெறும் சுண்டைக்காய்களைப் பறித்துக் கூட்டுக்கறி போன்று சமைக்கலாம்.

ருசிக்கும் வத்தக்குழம்பு (Vattakkulambu)

நன்கு காயவைத்த சுண்டைக்காயை, சிறிதளவு எண்ணெய் சேர்த்து வறுத்து மோருடன் சேர்த்து கலந்தும் சாப்பிடலாம். மேலும் நன்கு வறுக்கப்பட்ட சுண்டைக்காயை வத்தக்குழம்பில் இட்டு ருசித்து மகிழலாம்.

சுண்டைக்காயின் நன்மைகள் (Benefits)

துருக்கியின் பெர்ரி என்று அழைக்கப்படும் சுண்டைக்காய் உட்கொள்வது அஜீரணம், வயிற்றுப்போக்கு மற்றும் இரைப்பை புண்கள் போன்ற பல குடல் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருகிறது.

இரும்புச்சத்துகளின் அரசன் (Benefits of Chives)

சுண்டைக்காயை நம்முடைய அன்றாட உணவுகளில் சேர்த்துக்கொண்டால், அவை இரத்த சோகையின் அறிகுறிகளைப் பெருமளவில் கட்டுப்படுத்துகின்றன. அவற்றில் காணப்படும் அடர்த்தியான இரும்புச் சத்து இதற்கு வித்திடுகிறது.

நோய் எதிர்ப்புச் சக்தி (Immunity)

சுண்டைக்காயில் காணப்படும் பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தொற்றுநோய்களைத் தடுக்கின்றன.

இதயநோய் (heart disease)

சுண்டைக்காயில் ஃபிளவனாய்டுகள், ஆல்கலாய்டுகள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பெருமளவில் இருப்பதால், பல்வேறு இருதய நோய்களைத் தடுக்கவும், பக்கவாதம் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது.

சிறுநீரகம் (Kidney)

சுண்டைக்காய் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் யூரிக் அமிலத்தை அழிக்க உதவுவதால், பல்வேறு சிறுநீரக நோய்களைத் தடுக்கிறது.

ஊட்டச்சத்து அணுகுண்டு (Nutrition Atomic bomb)

பார்க்க சிறியப் பொருளாக தென்படும் சுண்டைக்காய், உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மருந்தாகச் செயல்படுகிறது. இதன்மூலம் ஊட்டச்சத்து நிறைந்த அணுகுண்டாகவும் சுண்டைக்காய் நமக்கு நன்மை செய்கிறது.

மேலும் படிக்க...

உளுந்தி ன் மருத்துவப் பயன்கள் - அறிந்து கொள்வோம்

துவரையின் மருத்துவ பயன்கள்

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் கொடிமுந்திரி

English Summary: Do you know what a nutrient atomic bomb is to prevent infections? That's the Turkey berry! Published on: 06 May 2021, 08:22 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.