1. வாழ்வும் நலமும்

ஆரோக்கியம் அளிக்கும் கடல் உணவு : மத்திய அரசு தரும் அருமையான வாய்ப்புகள்!!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
மீன் வளர்ப்பு
image credit: Chiago sun times

மீன் வளர்ப்பு என்பது தற்போது அதிக லாபம் தரும் தொழிலாக பார்க்கப்படுகிறது. இதனால் மீன் வளர்ப்பை ஊக்குவிக்க மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது

மீன் வளர்ப்பு

நமது நாட்டில் மீன்வளர்ப்பில், பொதுவாக 5 முறைகள் பின்பற்றப்படுகின்றன. அவை நன்னீர் மீன்வளர்ப்பு, உவர்நீர் மீன்வளர்ப்பு, குளிர்நீர் மீன்வளர்ப்பு, வண்ண மீன் அல்லது அலங்கார மீன்வளர்ப்பு, மற்றும் கடல்நீர் மீன்வளர்ப்பு ஆகும்.

நீரின்  வெப்பநிலை, கலங்கல் தன்மை, நீரின் கார அமிலத் தன்மை, கரையும் ஆக்ஸிஜன் (Dissolved Oxygen), கார்பன் - டை - ஆக்ஸைடு (Carbon-di-oxide), மொத்த காரத்தன்மை, நீரின் கடத்துதிறன், மண்ணின் வெப்பநிலை, மண்ணின் கார அமிலத் தன்மை, மண்ணின் அங்கக கார்பன், பாஸ்பரஸ், பொட்டாஷ்யம், நீரின் உயிர்நிறை போன்ற காரணிகள் மீன்வளர்ப்பிற்கு அத்தியாசியமாக இருந்து வருகிறது.

அரசாங்க உதவிகள் (Government Schemes)

மீன் வளர்த்தல், மீன் பிடித்தல் மற்றும் அவற்றைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்தல் போன்றவற்றுக்கு கடனுதவி, மீன்வளர்ச்சி தொடர்பான பயிற்சிகள், மானியம் அளித்தல் உள்ளிட்டவற்றை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதேநேரத்தில் மத்திய அரசின் கடல் பொருள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம், அலங்கார மீன் வளர்க்கவும், அவற்றை விற்பனை செய்யவும் ஏராளமான உதவிகளை செய்து வருகிறது.

அலங்கார மீன் வளர்ப்பில் கிராமப்புறங்களில் ஏராளமான வேலை வாய்ப்புக்களை உருவாக்குகிறது. அலங்கார மீன் வளர்ப்போர், அவற்றை சந்தைப்படுத்துவதற்கு ஏதுவாக, கூட்டுறவு சங்கங்களுக்கு கட்டிடம், இதர பொருட்கள் வாங்க நிதி உதவி அளிக்கப்படுகிறது. மேலும், மீன் உற்பத்தி, சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிக்கு உதவுதல் ஆகிய பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.


Image credit: marketresearch.Biz


நிதியுதவி (Financial Assistance)

ஆண்டிற்கு 60,000 மீன் உற்பத்தி செய்வோருக்கு 75,000 ரூபாய் வரையும், 1 லட்சத்து 60,000 மீன் உற்பத்தி செய்வோருக்கு 2 லட்சம் ரூபாய் வரையும், வருடத்திற்கு 5 லட்சம் மீன் உற்பத்தி செய்வோருக்கு 7.5 ரூபாய் லட்சம் வரையும், கூட்டுறவு சங்கங்களுக்கு 5 லட்சம் ரூபாயும் அரசு சார்பில் நிதி உதவி அளிக்கப்படும்.

மீன்வளர்ப்புக்கு கருவிகள் (Equipment)

சிமென்ட், தண்ணீர் தொட்டி, கண்ணாடித்தொட்டி, தண்ணீர் சுத்தம் செய்யும் கருவிகள் போன்றவை வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசிடம் பதிவு பெற்ற அலங்கார மீன் வளர்ப்போர் கூட்டுறவு சங்கங்களுக்கு'' மீன்களை ஏற்றுமதி செய்யவும், விற்பனை செய்யவும் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவுக்குள் ஏற்றுமதியாளர் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் பற்றியும், இந்திய அரசு கடல் பொருள்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்க கொண்டு வந்துள்ள அனைத்து திட்டங்களையும் பற்றி அறிந்து கொள்ள உதவி இயக்குநர், கடல் பொருள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம், எம்பிஇடிஏ ஹவுஸ், பனம்பள்ளி அவென்யு,கொச்சி, கேரளா- 682 036, என்ற முகவரியிலும், 0484 231 197 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு: http://mpeda.gov.in என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.

Image Credit by: Asianet News

பிடிப்பு மீன்வளம்

ஆறு, கடல் மற்றும் பெருங்கடல் பகுதிகளிலிருந்து மீன்கள், சுறா, மெல்லுடலிகள், சிங்கிறால், நண்டு ஆகியவற்றைப் பிடித்து வந்து மனிதப்பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவதே பிடிப்பு மீன்வளம் எனப்படும். நம் நாட்டில் மீன் பிடிப்பு மூலமாக 68 சதவீதம் மீன்கள் கிடைக்கின்றன.

அசைவத்தில் சிறந்தது (Best in Non-Veg)

பிற மாமிசங்களை விட தரமான மாமிசப் புரதங்களை மீன்கள் நமக்கு அளிக்கின்றன. மேலும் மீன் இறைச்சியில் உள்ள கொழுப்புகளில் உடலுக்குக் கேடு விளைவிக்கும் கொழுப்பு இல்லை. அதேநேரத்தில் மீன்களின் விலையும் ஆடு, கோழி போன்ற பிற இறைச்சியுடன் ஒப்பிடும்போது மலிவாகவே உள்ளது.


மீன் அளிக்கும் நன்மைகள் (Benefits of Fish)

  • மற்ற அசைவ உணவுகளை விட மீனில், சாச்சுரேட்டட் கொழுப்பு (saturated fat) அதிகம்  உள்ளதால், இது உடல் எடையை அதிகரிக்காது.

  • உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஃபேட்டி ஆசிட்டான (Faty acid) ஒமேகா 3 உள்ளது. இதனால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு, உணவுக் கட்டுப்பாட்டில் (Diet) இருப்போருக்கு உகந்த உணவாகத் திகழ்கிறது.

  • மீன் சாப்பிடுவதால் இதய நோய்கள் குணமாகும் என தெரிவிக்கின்றன சமீபத்திய ஆய்வுகள். சிலவகை மீன்களில் அதிகம் ஒமேகா 3 (Omega 3)நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

  • மீன் உணவு, மூளைக்கு சிறந்த உணவு என கூறப்படுகிறது, வாரத்திற்கு ஒருமுறையாவது உணவுடன் மீனை சேர்த்து கொள்வது நல்லது. மேலும், கண்பார்வை குறைபாடு, தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், மீனை வாரத்திற்கு இருமுறையாவது எடுத்துக்கொள்வது நல்லது.

  • மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவதற்கான அபாயம் குறைகிறது. நினைவுத்திறன் குறைபாடு, நரம்புத்தளர்ச்சி நோய் போன்ற பல நோய்கள் குணமடையும்.

  • மீன் எண்ணெய்யை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவு குறையும். இந்த எண்ணெய் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாகவும் அழகாக பொலிவோடு இருக்கவும் உதவும். இதற்கென மீன் எண்ணெய் மாத்திரைகளும் சந்தைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

  • மனித மூளையின் பல்வேறு செயற்பாடுகளுக்கு அவசியத்தேவையாக இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மீன்களில் அதிக அளவு இருக்கின்றன.

  • கூடுதலாக மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க...

PM Kisan திட்டத்தில் இப்போது அதிக விவசாயிகள் பயன் பெறலாம்!

கேன்சர் கில்லர் என்று சொல்லப்படும் முள் சீத்தா பழம்! அதன் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு!

காளான்களை பதப்படுத்தும் மற்றும் விற்பனை முறைகள்!

English Summary: Excellent Asistance to fisheries by union Government Published on: 07 July 2020, 08:09 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.